Look at the detailed work: Prakashraj's anger; reason.
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியதாக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளுகள் உண்மையா? என்ற விவரம் பார்ப்போம்..
கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவின. தற்போது இந்த வதந்திகளுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,
‘நச்சுத்தன்மை கொண்ட போலிச் செய்தி பரப்புபவர்களே, ‘ஸ்பிரிட்’ படத்துக்கான எனது காட்சிகள் இன்னும் படமாக்கப்படவே இல்லை.
அதற்குள்ளாகவே உங்கள் ‘வாட்ஸ்அப் தொழிற்சாலைகள்’ பல கதைகளை உருவாக்கி வருகின்றன. இனியாவது வளர்ந்து உருப்படியான வேலையைப் பாருங்கள்’ என சாடியுள்ளார். இதன் மூலம் தான் இன்னும் படத்தில் நீடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். விவேக் ஓபராய் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகி, தற்போது அந்த கதாபாத்திரத்தில் திரிப்தி டிம்ரி நடிக்க உள்ளார். இப்படம், 2027-ஆம் ஆண்டின் மத்தியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…