வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா முத்துவுக்கு போன் போட்டு என்ன மன்னிச்சிடுங்க மாமா நான் தெரியாம உங்க மேல கோபப்பட்டு இருந்து அதுவும் இல்லாம அக்கா கிட்டயும் பேசாம இருந்த என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்ல நீ நம்ம வீட்டு பொண்ணு சீதா எதுக்காக மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு இருக்க நீ உங்க அக்கா கிட்ட பேசினாலே போதும் என சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார் பிறகு சந்திரா இதே மாதிரியே சந்தோஷமா இருக்கணும்னு எனக்கு அதுவே போதும் என சொல்லுகிறார் மறுபக்கம் மனோஜ் ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க ஒரு பாசிமணி விற்பவர் போல வருகிறார் பின்னால் ஒரு மூட்டை இருக்க மனோஜ் என்ன வேணும் என்னது இது பின்னாடி மூட்டை என்று கேட்க நான் இஸ்திரி பெட்டி வாங்க வந்திருக்கேன் என சொல்லுகிறார் என கேட்டுவிட்டு பிறகு பின்னாடி என்ன இருக்கு என்று கேட்கிறார் என் உங்களோட குலதெய்வம் என சொல்ல உன் குலதெய்வம் போட்டோ என மனோஜ் நினைத்துக் கொள்கிறார்.
பிறகு கடையில் இருக்கும் ஒருவரை கூப்பிட்ட ஹைன் பாக்ஸ் கொடுத்து அனுப்பிவிடு என்று சொல்லுகிறார். அந்த மூட்டையில் இங்கேயே வச்சுட்டு போ என்று சொல்ல அவரும் வைத்து விட்டு உள்ளே செல்கிறார் பிறகு ரோகிணி வரார் தெரியாமல் அதை உடைத்து விடுகிறார் அந்த பெட்டி ஓபன் ஆகி அதிலிருந்து பாம்பு வெளியே வந்து விடுகிறது. யாரும் இதே கவனிக்காமல் இருக்க ரோகினி மனோஜிடம் வந்து வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொல்ல இன்னும் ரெண்டு பில் மட்டும் இருக்கும் செக் பண்ணிட்டு வந்துடறேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து இருவருக்கும் போன் வர இவர்கள் ஃபோன் பேச சென்று விடுகின்றனர் அதற்குள் ரோகினி கொண்டு வந்த பேக்கில் அந்த பாம்பு வந்துவிடுகிறது. இது தெரியாமல் ரோகினி வீட்டுக்கு அந்த பேக்கை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார். விஜயா என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க என்று கேட்க கொஞ்சம் வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சுமா அதனாலதான் என்று சொல்லுகிறார் இருந்தாலும் ஓனர் இருந்தா தானே மதிப்பாங்க வேலை செய்றவங்க ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க என்று சொல்ல இவளையாவது விட்டுட்டு வர வேண்டியதுதானே என்று கேட்கிறார் எனக்கு நாளைக்கு பிரைடல் மேக்கப் இருக்கு என்று சொல்லி இதுக்கான பொருள் தான் வாங்கிட்டு வர போயிருந்தேன் என பாம்பு இருக்கும் பையை எடுத்துக்காட்ட விஜயா நான் எதுக்கு அதெல்லாம் பார்க்கணும் என சொல்லி விடுகிறார்.
பிறகு அவர்கள் ரூமுக்கு சென்று விட பேக்கை கட்டில் மீது வைக்கிறார் பிறகு பிரஷப்பாக மனோஜ் செல்ல ரோகினிக்கு போன் கால் வருகிறது பிறகு அந்த பாதியில் இருந்து பாம்பு வெளியில் வந்து ஹாலுக்கு வருகிறது ஆனால் யாரும் கவனிக்காமல் இருக்கின்றன விஜயா மீனாவிடம் பால் கேட்க மீனாவும் எடுத்துக் கொண்டு வந்து வைக்கிறார் ஆனால் விஜயா நான் போய் ஒரு போன் பேசிட்டு வரேன்னு சொல்லு போவதற்குள் பாம்பு வந்து அந்த பாலை குடித்து விடுகிறது ஆனால் அதையும் யாரும் கவனிக்காமல் பாலை யார் கொடுத்திருப்பாங்க என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். உடனே முத்து இந்த மாதிரி திருட்டு வேலை எல்லாம் மனோஜ் தான் பண்ணுவான் என சொல்லுகிறார். பிறகு மனோஜிடம் இந்த பால குடிச்ச என்று கேட்கின்றனர். இப்ப யார் குடிச்சா என்ன இப்ப எதுக்கு அதை பேசிகிட்டு மீனா கிட்ட சொன்னா இன்னொரு பால் எடுத்துட்டு வந்து கொடுக்க போற என்று சொல்ல அப்ப இப்படிப்பா கண்டுபிடிக்கிறது என்று முத்து கேட்கிறார் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என சொல்லுகிறார்.
கொஞ்ச நேரத்தில் மனோஜ்க்கு போன் வர என்ன விஷயம் என்று கேட்கிறார் அப்போது ஷோரூம் இல் இருந்து எல்லோரும் வெளியில் இருப்பதாகவும் அங்கு வந்த பாம்பாட்டி அவரோட பாம்பு வெளியில் வந்துவிட்டதாகவும் சொல்றாரு அதனால ஷோரூம் ல தேடிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல மனோஜ் பயப்படுகிறார் சிசிடிவி ல பாக்கலையா என்று கேட்க ரோகினி மேடம் வரும்போது காலுல அந்த கூடய தட்டி இருக்காங்க அதனால அது வெளிய வந்துட்டு இருக்கு என்று சொல்ல அதுக்கப்புறம் எங்க போச்சுன்றது கேமரால காட்டல என்று சொல்லுகிறார் பிறகு யாராவது பாம்பு பிடிக்கிறவங்க வர வச்சு தேடிப் பார்க்க சொல்ல அவர்களும் கண்டிப்பாக ஷோரூம்ல இல்ல என சொல்லுகின்றனர்.
பிறகு விஜயா தண்ணீர் குடிக்க பிரிட்ஜ் பக்கத்தில் வர லைட் இல்லாமல் இருப்பதால் என்ன கயிறு மாதிரி இருக்கு என்று தொட போக பாம்பு சீறியதை பார்த்து பதறி அடித்து குடும்பத்தினரை கூப்பிட்டு கத்துகிறார் என்னாச்சு என்று கேட்க பா..பா என்று சொல்கிறாரே தவிர வேறு எதுவும் சொல்லாமல் இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் என்ன ஆச்சு என்று கேட்க பாம்பு இங்கதான் இருக்கு என்று சொல்லுகிறார் உடனே அனைவரும் அலற முத்து சென்று பார்க்க பிரிட்ஜ் பக்கத்தில் இருக்கிறது உடனே விஜயா என்ன செய்வது என புரியாமல் இருக்க முத்து பாம்பை பிடிக்கிறாரா? குடும்பத்தில் என்ன நடக்கிறது?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


