மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவும் கோர்ட்டில் காத்துக் கொண்டிருக்க மனோஜ் மற்றும் விஜயா வந்து காரில் இறங்குகின்றனர் எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல உங்களை யார் இவ்வளவு முன்னாடி வரச் சொன்னது என்று விஜயா கேட்கிறார். அப்பா தான் இவளை கூட இருந்து பார்த்துக்க சொல்லி இருக்காரு அதுவும் இல்லாம வக்கீல் அம்மா கூட இருக்க சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் ஆட்டோவில் வந்து ரோகினி இறங்க சோகமாக மேக்கப் இல்லாமல் இருப்பதை பார்த்து எப்பவுமே பவுடர் அடிச்சுக்கிட்டு மேக்கப் போட்டுட்டு இருப்பா இப்படி இருக்கா என்று விஜயா கேட்கிறார்
உடனே முத்துவும் மீனாவும் இதுதான் அவர்களோட திட்டமாக இருக்கும் என்று சொல்லுகின்றனர். மனோஜிடம் வந்து எப்படி இருக்க மனோஜ் என்று கேட்க மனோஜிடம் பேச விடாமல் அழைத்துச் சென்று விடுகிறார். கவுன்சிலிங் நடக்கும் இடத்திற்கு சென்று உட்கார அப்போது விஜயா முத்து மீனாவை வெளியில் போக சொல்லி விடுகின்றனர். விஜயா என் பையனுக்கு ஒன்னு தெரியாது நான் கூட இருக்கிறேன் என்று சொல்ல டைவர்ஸ் மட்டும் கேட்க தெரியுமா என்று சொல்லிவிட்டு விஜயாவை வெளியில் அனுப்புகின்றனர். பிறகு ரோகிணி மற்றும் மனோஜிடம் பிரச்சினையை பற்றி கேட்க மனோஜாவை என்னை ஏமாத்திட்டா அதனால நான் அவளுக்கு டைவர்ஸ் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்
நீங்க என்ன சொல்றீங்க என்று ரோகினி இடம் பேச ஆரம்பிக்க உடனே ரோகினி அழ ஆரம்பித்து விடுகிறார். நான் மனோஜ பிடிச்சதனாலதான் இந்த மாதிரி பொய் சொன்ன நான் மனோஜ் கூட காலம் பூரா வாழ ஆசைப்படுறேன் என்று சொல்லி மனோஜ் காலில் விழுந்து கெஞ்சி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார். உடனே அங்கு இருப்பவர் இரண்டு பேரையும் உட்கார சொல்லிவிட்டு மீண்டும் பேச இவளால எங்க குடும்பத்துல நிறைய பிரச்சனை வந்துருச்சு எங்க அம்மா இவள நம்பி பாசமா பாத்துக்கிட்டாங்க ஆனா இவ எல்லாரும் ஏமாத்திட்டா என்று மனோஜ் சொல்ல உடனே ரோகினி அவங்க என்ன ரொம்ப கொடுமை படுத்தினாங்க நான் நினைச்சிருந்தா டொமஸ்டிக் வயலன்ஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாம் ஆனால் நாம் மனோஜ் கூட சந்தோஷமா வாழனும் என்றதுக்காக தான் அப்படி எதுவுமே பண்ணல எங்கள பிரிச்சு வச்சுடாதீங்க எங்களை சேர்த்து வைங்க மனோஜ் இல்ல தான் நான் செத்து போயிடுவேன் என் பையனோட வாழ்க்கை கேள்விக்குறியாகிடும் என்று அழுகிறார். இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி பழி போட்டுக் கொண்டே இருக்க அங்கு இருப்பவர்கள் டென்ஷன் ஆகி உங்ககிட்ட பேசி சேர்த்து வைக்க முடியும்னு எனக்கு தோணல அதனால உங்களுக்கு திருப்பியும் கோர்ட்டுக்கு எழுதி கொடுத்துவிடுகிறேன், ஜட்ஜ் பைனல் தீர்ப்பு கொடுப்பாரு என்று சொல்லிவிட ரோகினியின் முகம் மாறுகிறது.
உடனே வெளியில் வந்தவுடன் விஜயா மனோஜிடம் என்ன ஆச்சு என்று கேட்க அவ வழக்கம் போல ஆவது நாடகம் ஆடிட்டா அதனால கேஸ் கோர்ட்டுக்கு மாத்திட்டாங்க அங்க தான் தீர்ப்பு கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். உடனே ரோகிணி திமிரோடு வர எதுக்குடி தொல்லை மாதிரி என் பையனை சுத்திக்கிட்டு இருக்க அவனை விட்டுட்டு போக மாட்டியா என்று கோபத்தில் அடிக்கப் போக முத்து மீனா தடுக்கின்றனர். இது கோர்ட்டு இங்க எதுவும் பண்ண கூடாது என்று சொல்லுகிறார். ரோகினி நான் மனோஜ் கூட தான் வாழ்வேன் உங்களால எதுவும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மறுபக்கம் அண்ணாமலை இடம் வீட்டில் விஜயா ரோகினி நடந்து கொண்ட விஷயத்தைப் பற்றி கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். நீயும் மனோஜ்க்கு பொண்ணு பாக்குற விஷயத்தில் இருந்து கொஞ்சம் அமைதியா இருக்க மாட்டேங்கிற அவளும் அடங்க மாட்டேங்குற என்று சொல்ல என்ன நடந்தாலும் நான் மனோஜ்க்கு பொண்ணு பாக்குற விஷயத்தை விடமாட்டேன் என்று சொல்லுகிறார்.
அன்னைக்கு அந்த சம்பந்த முடிய வேண்டியது அந்த கிழவன் வந்து கெடுத்து விட்டுருச்சு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து வருகிறார் முத்து அண்ணாமலை இடம் என்ன சொல்லுகிறார்?அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைக்கே எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 20-03-26

