Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து மீது கோபப்பட்ட மீனா.. ஸ்ருதி ரவிக்கு வந்த புதிய சிக்கல்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

siragadikka asai serial episode update 16-03-26

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரவி மற்றும் மனோஜ்க்கு ஒரு கதையை சொல்ல அவர்கள் புரியாமல் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு தெரிந்து ஓடி விடுகின்றனர். மறுநாள் காலையில் ரவி காபி போட்டு கொடுக்க அந்த நேரம் பார்த்து ஒரு பெண்மணி வருகிறார் முத்து யார் என்று கேட்க வேலைக்கு ஆள் வேண்டும் என்று வர சொன்னதாக சொல்ல விஜயா நான் தான் சொல்லி வைத்திருந்தேன் உள்ள வாங்க என்று கூப்பிடுகிறார். அந்தப் பெண்மணி இடம் நீ நல்லா சமைப்பியா என்று கேட்க அசைவம் சைவம் ரெண்டுமே நான் நல்லா சமைப்பேன் என்று சொல்லுகிறார்.

விஜயா பேசிக் கொண்டிருக்கும்போது என்னால் ரொம்ப நேரம் தலைய சாய்ச்சு பார்த்துட்டு இருக்க முடியாது ஒண்ணுனா உட்காரா இல்ல நீங்க நில்லுங்க என்று சொல்ல முத்து உட்கார சொல்ல விஜயா வேண்டாம் நான் இருக்கிறேன் என்று சொல்லுகிறார். எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு நான் ஒரு நாளைக்கு அஞ்சு காபி குடிப்பேன் அதற்காக எல்லோருக்கும் சேர்த்து ரெண்டு லிட்டர் பால் வாங்கி வச்சிருங்க என்று சொல்ல விஜய் அதிர்ச்சி அடைகிறார். சம்பளம் எவ்வளவு எதிர்பார்ப்பாய் என்று கேட்க மினிமம் பத்தாயிரம் என்று சொன்ன அந்த பெண்மணி எனக்கு இன்னொரு கண்டிஷன் இருக்கு இந்த வீட்ல ஆம்பளைங்க நாலு பேரு இருக்காங்க எனக்கு பாதுகாப்பு இருக்காது என்று சொல்ல என்னோட பசங்க எல்லாம் அப்படி கிடையாது என்று சொல்லுகிறார். எல்லா அம்மா குடும்பம் அப்படி தான் சொல்லுவீங்க நீங்க வெளியே போனதுக்கு அப்புறம் நிறைய பசங்க பண்ற வேலை என்ன பார்த்து இருக்கேன் என்று சொல்லுகிறார்

அதுக்காக நான் கிச்சன்ல சமைக்கிற வரைக்கும் நீங்க எனக்கு பாதுகாப்பா வெளிய உட்கார்ந்துகிட்டு இருக்கணும் என்று சொல்ல விஜயா டென்ஷன் ஆகிறார். இன்னொரு கண்டிஷன் இருக்கு எனக்கு வாரத்துல ரெண்டு நாள் லீவு வேண்டும் அஞ்சு நாள்தான் வேலை செய்வேன் என்று சொல்ல விஜயா இன்னும் அதிர்ச்சியடைகிறார். என்ன நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்க நீ சரிப்பட்டு வர மாட்ட நீ எனக்கு வேலைக்கு வேண்டாம் என்று சொல்ல அது பெண்மணியும் பொண்ணுங்க இல்லாத வீட்டில் மகாலட்சுமி தாங்க மாட்டான்னு சொல்லுவாங்க அதே மாதிரி நானும் இந்த வீட்ல வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள். அண்ணாமலை விஜயாவிடம் மீனாவின் அருமை பற்றி சொல்ல, அவ இருந்தா நம்ம உசுருக்கு தான் ஆபத்து என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

முத்து மீனாவை சந்தித்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல நான் வேணும்னா எனக்கு தெரிஞ்ச ஒரு அக்காவை சமைக்க அனுப்பவா என்று கேட்க அதை மட்டும் பண்ணிடாத அப்புறம் உன்னோட அருமை அவங்களுக்கு தெரியாது என்று சொல்ல அப்போ என்ன சமையல்காரியா தான் பாக்குறீங்களா என்று மீனா கோபப்படுகிறார். நான் அந்த அர்த்தத்துல சொல்லல மீனா அம்மா அப்படி பார்க்கிறார்கள் என்று தான் சொன்னேன் நீ என்னைக்குமே அந்த வீட்டுக்கு மகாலட்சுமி தான் என்று சொல்லியும் மீனா சமாதானம் ஆகாமல் இருக்க முத்து காலில் விழுந்தும் தோப்புக்கரணம் போட்டும் மீனாவை சமாதானப்படுத்துகிறார். ஒருவழியாக மீனாவும் சமாதானமாக மீனா முத்துவை சந்தோஷமாக அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கம் ரவி சுருதி இடம் ஒரு புது டிஷ் செய்திருப்பதாகவும் அது வந்து டேஸ்ட் பண்ணி பாரு என்றும் சொல்ல சுருதி டேஸ்ட் பண்ணி பார்த்துவிட்டு பன்னீர்ல செஞ்சு இருக்கியா ரொம்ப டேஸ்டா இருக்கு என்று சொல்லுகிறார் இதுக்கு பேரு வச்சிட்ட ஸ்ருதி ஸ்பைசி பன்னீர் லாலிபாப் என்று சொல்ல என்னை திட்டுற மாதிரி இருக்கு பாராட்டுற மாதிரியும் இருக்கு என்று சொல்லுகிறார்.

உன்ன மாதிரி வெளியே ஹார்டாவும் உள்ள சாப்டாவும் இருக்கு இல்ல அதனாலதான் என்று சொல்ல இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மீனா பதட்டமாக வருகிறார். ஸ்ருதி ரவி என்ன சொல்லுகின்றனர்? மீனா சொன்ன விஷயம் என்ன? அதற்கு ஸ்ருதி என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 16-03-26

siragadikka asai serial episode update 16-03-26