Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனா செய்த வேலை. முத்துவைப் பார்த்து வியந்த விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 31-01-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் உறியடி போட்டி தொடங்க முதலில் மனோஜ் விளையாட வர அவர் உரியடிக்க போகும்போது ரோகிணி அப்படித்தான் அடிங்க என்று வழி சொல்ல சுருதி முத்து டீம் ஜெயிக்க கூடாது என ரோகினி வாயை பொத்துகிறார்.

அதன் பிறகு மனோஜ் தோற்றுப் போக அடுத்ததாக ரோகிணியை களம் இறங்குகின்றனர். ரோகினி பானையை தாண்டி சென்று கோலை தூக்கி அடித்துக் கொண்டு கடைசியில் அவுட் ஆகிறார்.

ரோகினியை தொடர்ந்து ரவியை அனுப்ப ரவியும் தோற்று போக பிறகு சுருதி கண்ணைக் கட்டிக் கொள்வதற்கு முன்பாக எத்தனை அடி எடுத்து வைக்க வேண்டும் எவ்வளவு உயரத்தில் பானை இருக்கிறது என எல்லாவற்றையும் அளந்து கொண்டு கண்ணைக் கட்டிக் கொண்டு செல்கிறார். ஆனால் ஹைட் எட்டாதால் ஸ்ருதியால் அடிக்க முடியாமல் போகிறது.

அதன் பிறகு மீனாவுக்கு கண்ணை கட்டிவிட அப்படியே எதிர் திசையில் திரும்பும் மீனா மனோஜ் தலையில் ஒரு அடியை போட எல்லோரும் பதறுகின்றனர். பிறகு முத்து பங்கேற்க சரியாக பானையை அடித்து உடைக்கிறார். எல்லோரும் முத்துவை தூக்கி கொண்டாட இறக்கி விடுங்கடா நம்ப டீம் தலைவியை தூக்கி கொண்டாடுங்க என்று சொல்ல முத்து மனோஜ் ரவி மூவரும் விஜயாவை தூக்கி கொண்டாடுகின்றனர். இந்த நேரத்தில் முத்துவை பார்த்து வியக்கிறார் விஜயா.

அதனைத் தொடர்ந்து டயர் ஓட்டும் போட்டி நடக்கிறது. ஆறு பேரும் ஒரே நேரத்தில் போட்டியில் பங்கேற்க கடைசியில் முத்து மற்றும் மீனா இருவரும் வெற்றி பெறுகின்றனர். போட்டிகள் முடிந்து எல்லோரும் குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும்போது பாட்டி ஒவ்வொருத்தரும் முத்து ஜெயிக்க கூடாது, மீனா ஜெயிக்க கூடாதுன்னு பேசிட்டு இருந்ததையும் நான் கேட்டேன் அதனால தான் உங்களை இப்படி இரண்டு அணியாக பிரித்து விளையாட வச்சேன்‌. ‌ இப்படி விளையாடும் போது கோவத்தை மறந்துட்டு ஒருத்தரோட வெற்றியை கொண்டாடுனீங்க, அவ்வளவுதான் வாழ்க்கை எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும் என பாடம் சொல்லித் தருகிறார்.

இதெல்லாம் முடிந்து எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது சுருதி நாம ஒரு கேம் விளையாடலாம் என்று ட்ரூத் ஆர் டேர் கேம் பற்றி சொல்கிறார். ரவி இந்த கேம் குறித்த விளக்க பிறகு சுருதி நானே விளையாட்டை தொடங்குகிறேன் என்று ரவியிடம் ட்ரூத்தா? டேரா? என கேட்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 31-01-24
siragadikka aasai serial episode update 31-01-24