ரவி கொடுத்த ஷாக். அதிர்ச்சியில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா எல்லா வேலைகளையும் செய்து கொண்டு கிச்சனில் இருக்க அங்கு வரும் முத்து எல்லா வேலையும் நீ தான் பண்ணிக்கிட்டு இருப்பியா சாப்பிட்டு தட்டு கூட கழுவி வைக்க மாட்டாங்களா என்று கோபப்பட எங்க நீங்க அமைதியா இருங்க நான் பார்த்துக்கிறேன் என்று முத்து சமாதானம் செய்கிறார்.

பிறகு உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்று கேட்க நான் தான் வெளியே சாப்பிட்டேன் என்று சொன்னேனே என்று கூற எனக்கு தண்ணி மட்டும் போதும் என்று கேட்க மீனா சுடுதண்ணி வச்சு எடுத்துட்டு வரேன் நீங்க போங்க என்ன அனுப்பி வைக்கிறார்.

பிறகு பாத்திரம் எல்லாம் கழுவி வைத்துவிட்டு சுடுதண்ணி எடுத்துக் கொண்டு ரூமுக்கு செல்ல முத்து என்ன சமைச்ச என்று கேட்க ஆளாளுக்கு தனித்தனியாக சமைத்ததை சொல்கிறார். பிறகு உனக்கு என்ன பண்ண என்று கேட்க வேலை பண்ணேன் என்று சொல்லி காலையில சீக்கிரம் எழுந்துக்கணும் டயர்டா இருக்கு படுத்து விடுகிறார்‌. இப்படி நீ பாட்டுக்கு எதுவும் சொல்லாமல் வேலை செஞ்சுகிட்டு இருந்தா உன்னை இந்த வீட்டு வேலைக்காரி ஆக்கிடுவாங்க அப்பாகிட்ட பேசி முதல்ல வேலைக்கு ஒரு ஆள் வைக்கணும் என கூறுகிறார்.

அடுத்ததாக ரவி மற்றும் ஸ்ருதி மனோஜ் ஷோரூம் கார் வாங்க வர அங்கு மனோஜ் என்று யாருமே வேலை செய்யவில்லை என்று கூறுகின்றனர். இதனால் ரவி மனோஜ்க்கு போன் பண்ணி ஷோரூமில் இருக்கும் விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பிறகு யார் அப்படி சொன்னது போனை குடு என்று சொல்ல ரவியும் ஷோரூமில் வேலை செய்பவரிடம் போனை கொடுக்க மனோஜ் இங்கிலீஷில் பேசி பில்டப் கொடுத்து அவரை மிரள வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ரவியிடம் அடுத்த வாரம் வாடா புது கார் வருது அப்போ வாங்கிப்ப என்று சமாளித்து அனுப்பி வைக்கிறார். பிறகு வீட்டுக்கு வந்த மனோஜ் விஜயாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் சீக்கிரம் ஒரு வேலைக்கு போடா என திட்டுகிறார்.

ரோகிணி வந்து என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க விஜயா ஆபீஸ் கதையை சொல்லிட்டு இருந்தான் என்று சமாளிக்கிறார். பிறகு ரவி மற்றும் ஸ்ருதி வர மனோஜ் இவ்வளவு நாளா ஒரு விஷயத்தை மறைத்து விட்டான் என்று சொல்ல மனோஜ் பதற ரவி அவனுக்கு ஆபீஸ்ல அப்படி ஒரு மரியாதை இருக்கு என பெருமையாக சொல்கிறார்.

ஸ்ருதி அவருக்கு இருக்க திறமைக்கு தனி ஷோ ரூமே வைக்கலாம் என்று சொல்ல விஜயா ஆமா ரோகினியோட அப்பா வந்தால் இவன் திறமையை பார்த்து தனியாக வைத்து கொடுத்திடுவார் என்று கூறுகிறார். வீட்டுக்கு வரும் முத்து என்ன உங்க அப்பா இன்னும் இந்த பக்கம் தலை காட்டாமல் இருக்காரு என்று கேள்வி கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

அண்ணாமலையும் எனக்கும் இந்த சந்தேகம் அடிக்கடி வருது, கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆச்சு இன்னும் உங்க அப்பா வரவே இல்ல. ஒரு போன் கூட பேசல என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார். இத்து‌டன் இன்‌றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 27-12-23
jothika lakshu

Recent Posts

விஜயா சொன்ன வார்த்தை,அண்ணாமலை கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை விஜயா திட்ட, முத்து மீனா சந்தோஷமாக இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

16 minutes ago

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு தமிழில், மனுநீ​தி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில…

48 minutes ago

துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம்

துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்.. மாரி…

55 minutes ago

சர்வமயா பட குழுவிற்கு சூர்யா ஜோதிகா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!

இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…

16 hours ago

சங்கர் இயக்கும் பிரம்மாண்ட படத்தின் தனுஷ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…

17 hours ago

என் மகள் உங்களுடைய தீவிர ரசிகை அவளுக்கு பாட வாய்ப்பு கொடுங்கள்.. பிரபல இசையமைப்பாளரிடம் தேவயானி வைத்த கோரிக்கை..!

80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…

17 hours ago