Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோகினி போட்ட பிளான்,விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 26-03-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புதிய அம்மாவும் வாசுதேவனும் ஒன்றாக சேர்ந்து நான் ஒரு ரவுடியை வரச் சொல்லி இருக்கேன் அவன் முத்து கிட்ட வம்பு பண்ணுவான். இதனால் பிரச்சனை உருவாகும் அதை வச்சு நம்ம பொண்ண நம்ப வீட்டோட நிறுத்துக்கலாம் என்று பிளான் போடுகின்றனர்.

மறுபக்கம் ரோகினியும் வித்தியாவும் ஏற்பாடு செய்த ஆளை வர வைத்து முத்துவை குடிக்க வைத்து அதன் மூலம் பிரச்சனையை செய்து இந்த ஃபங்ஷன் நிறுத்தி அதனால் அப்பா வரல என்று சொல்லி விட பிளான் போடுகின்றனர்.

இங்கே முத்து எதுவும் பேசாமல் மௌன விரதத்தில் இருக்க மீனா அவரை கிள்ளி பார்க்க அப்போதும் முத்து வாய் திறக்காமல் இருக்கிறார். இதையடுத்து ஸ்ருதி நிறைய நகைகளை போட்டு ரெடியாக இவ்வளவு நகை வேண்டாவென்று வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்க அவரது ஃபிரண்ட்ஸ் உன்னோட சேர்ந்து ரோகிணிக்கும் தாலி பிரிச்சு போடுறாங்கல ரெண்டு பேர்ல யார் அதிகமா நகை போட்டு இருக்காங்கன்னு பார்ப்பாங்க என்று சொல்கிறார்கள்.

பிறகு ஸ்ருதி என் அம்மா தாலி பிரித்து போடும்போது துளசி மாலை தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாலையுடன் சுருதி ரூமுக்கு செல்ல விஜயா எங்க வழக்கப்படி ரோஜாப்பூ மாலை தான் போட்டுக்கணும் என்று அவரும் மாலையோடு செல்கிறார். ரூமுக்குள் சென்றதும் இருவருக்கும் இடையே இந்த மாலை தான் போடணும் என்று வாக்குவாதம் உருவாகிறது. இதையெல்லாம் பார்த்த முத்து கண்டிப்பா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு தான் வெளியே வருவாங்க என்று மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ‌

எங்க வழக்கத்தை விட்டுக் கொடுக்க முடியாது என இருவரும் விடாப்படியாக இருக்க ஸ்ருதி முதலில் தன்னுடைய அம்மாவின் கையில் இருக்கும் மாலையை வாங்குகிறார். அதை கழுத்தில் போட்டுக் கொண்டு விஜயா கையில் இருக்கும் மாலையையும் வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்கிறார். இதைப் பார்த்து இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 26-03-24
siragadikka aasai serial episode update 26-03-24