Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மரியம் எடுத்த முடிவு, சந்தோஷத்தில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 26-03-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜோசப் பாக்கியாவை உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை வீட்டை விட்டு வெளியே போங்க என துரத்த மரியமும் போங்க என்று கண் காட்ட பாக்கியா வெளிய வருகிறார்.

பிறகு மரியம் ஜெனியின் ரூம் கதவை திறந்து விட பாக்யாவிடம் பேச வெளியே வர ஜோசப் தடுத்து நிறுத்துகிறார். செழியன் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் அவ்வளவுதானா எல்லாம் என்று கேட்க அவன் வேற கல்யாணம் பண்ணினால் பண்ணிக்கிட்டு போகட்டும் நான் உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்ல இன்னொரு கல்யாணத்தை பத்தி பேசாதீங்க டாடி என பதிலடி கொடுக்கிறார்.

பிறகு மரியத்திடம் செழியன் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணலாம் அவ்வளவுதானா என்று ஜெனி அழுது துடிக்கிறார். வீட்டுக்கு வந்த பாக்கியா ஈஸ்வரியிடம் சாப்பிட்டீங்களா என்று கேட்க நீ பண்ண வேலை இல்ல எனக்கு பசியே இல்லாம போச்சு அவ்வளவு நிறைவா இருக்கு என கோபப்படுகிறார். பிறகு ஈஸ்வரி உள்ளே எழுந்து செல்ல ராமமூர்த்தியிடம் பேசிய விஷயத்துக்காக மன்னிப்பு கேட்க அவர் பாக்கியாவை புரிந்து கொண்டு செழியன் விஷயத்தில் உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதை செய்யணும் கூறுகிறார்.

அடுத்ததாக பாக்கியா எழில் மற்றும் அமிர்தாவிடம் ஜெனி வீட்டுக்கு போனதையும் அங்கு நடந்ததையும் பேசிக்கொண்டிருக்க மரியம் போன் போட்டு செழியனின் கல்யாணம் பற்றி தெரிந்ததும் ஜெனியின் கோபத்தை பற்றி கூறுகிறார். இனிமே அவங்க ரெண்டு பேரும் சந்திச்சு பேசுறது தான் சரியா இருக்கும் அதுவும் உடனே நடக்கணும் அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன் என்று சொல்ல பாக்யா சந்தோஷப்படுகிறார்.

மறுநாள் காலையில் லொகேஷனையும் அனுப்பி வைக்க பாக்கியா செழியன் உட்பட யாருக்கும் இந்த விஷயத்தை சொல்லாமல் செழியனை ஜெனியை பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவெடுக்கின்றனர். செழியனுக்கு ஒரு டிரஸ்ஸை தேர்ந்தெடுத்து அதைப் போட வைத்து பாக்கியா எழில் செழியன் என மூவரும் வெளியே கிளம்ப கோபி ஈஸ்வரி ராமமூர்த்தி ஆகியோர் சோபாவில் உட்கார்ந்து இருக்கின்றனர். இவர்களைப் பார்த்து எங்க போறீங்க என்று கேட்க மூவரும் ஆளுக்கு ஒரு பதிலாக சொல்லி சிக்கிக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 26-03-24
baakiyalakshmi serial episode update 26-03-24