siragadikka aasai serial episode update 15-03-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து உன்னை நான் பணத்தை வாங்கிக்கொண்டு நேராக கோவிலுக்கு சென்று மாலை கட்டியவர்களுக்கு சம்பளம் கொடுக்க அவர்கள் மீனா எங்க வீட்டு பொண்ணு நாங்க உதவியா தான் செய்ய வந்தோம் பணம் எல்லாம் வேண்டாம் என சொல்லி விடுகின்றனர்.
பிறகு முத்து போன் பேச போனதும் மீனா இந்த பணத்தை என்ன பண்ண போற என்று கேட்கிறார்கள். எவ்வளவு நாளைக்குத்தான் மஞ்சள் கயிறு போட்டுக்கிட்டு இருப்ப ஒரு தாலி வாங்கிக்க என்று சொல்ல நீ வேற ஒரு யுத்தம் வச்சிருக்கேன் அவருக்கு கார் வாங்க போவதாக சொல்கிறார்.
பிறகு முத்து மற்றும் மீனா பணத்துடன் வந்து அண்ணாமலையிடம் கொடுக்க அவர் இது நீங்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் உங்ககிட்டயே இருக்கட்டும் என சொல்கிறார். பிறகு இருவரும் அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர்.
அடுத்து ரோகினி பார்லர் கிளம்பும்போது விஜயா அவரை கூப்பிட்டு வச்சு நீயும் தான் பார்லர் வச்சுட்டு இருக்க, மாசம் மாசம் எனக்கு பாக்கெட் மணி தர அதுக்கு என்ன காரணம் நீ என் மேல அவ்வளவு மரியாதை வச்சிருக்கேன் ஆனா நீ வச்சிருக்க மரியாதைய இங்க வேற யாரும் எனக்கு தரவில் என்று பேச மீனா ரூமுக்குள் சென்று பீரோவை திறந்து பணத்தை எடுக்க ரோகினி உங்களுக்கு கொடுக்க தான் பணம் எடுக்குறாங்க போல என்று ஆசையை காட்டிவிட விஜயா ஆவலோடு காத்திருக்க அங்கு வந்த மீனா கேஸ்ல சாம்பார் வெச்சிருக்கேன் கொதிச்சதும் ஆப் பண்ணிடுங்க நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வராத என்று சொல்லி வெளியே செல்ல விஜயா பல்பு வாங்குகிறார்.
கொஞ்சம் பணம் வந்ததும் என்னையே வேலை வாங்குறா எனும் புலம்புகிறார். ரோகினி பணத்தோட போறாங்க என்ன பண்ண போறாங்க என்று கேட்க என்ன பண்ணலாம் மொத்தமா எடுத்துட்டு போய் அவங்க அம்மாகிட்ட கொடுத்துட்டு வருவா என்று சொல்ல மீனா கார் செட்டுக்கு வந்து செல்வத்திடம் அவருக்காக கார் வாங்க போவதாகவும் அதுவும் சப்ரைஸாக வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் சொல்ல முத்துவேல் ஏற்கனவே ஒரு சில கார் பார்த்து வச்சிருக்கான் என்று சொல்ல அந்த காரை பார்க்க கிளம்பி செல்கிறார்.
காரின் விலை மூன்று லட்சம் எனவும் முதல்ல கொஞ்சம் பணத்தை கட்டிட்டு மீதி மாதம் மாதம் கட்டுணா போதும் என சொல்கின்றனர். பூ கட்டிய பணத்தோடு இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படுவதால் மீனா சீதாவிடம் ஐடியா கேட்க அவர் சிதம்பரம் ஒருத்தர் இருக்கார் அவர் நியாயமான வட்டிக்கு கடன் தரார், ஆனால் கடையை பார்த்துட்டு தான் தருவாரு நான் அவர்கிட்ட சொல்றேன் என சொல்லி விடுகிறார்.
பிறகு சிதம்பரம் மீனாவின் கடையை வந்து பார்த்துக் கொண்டிருக்க மேலே இருந்து பார்த்த விஜயா கீழே இறங்குவது யார் என்று கேட்க சிதம்பரம் என்று சொல்ல சிதம்பரம்னா? எதுக்கு என் வீட்டு முன்னாடி நோட்டம் விட்டுட்டு இருக்கீங்க என்று கேட்க நீங்க யாருன்னு கேட்க நான் விஜயா என்று சொல்ல உங்க பேர்ல தான் கடையே இருக்கா என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…