ரோகினி கலாய்த்த ஸ்ருதி, மனோஜ் செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் மனோஜ் என இருவரும் புதிய கார் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். மனோஜ் வீட்டிற்குள் போகாமல் அம்மாவுக்கு போன் போட்டு நீங்க ஆரத்தி கரைத்து கொண்டு வாங்க நாங்க புதுசா கார் வாங்கிட்டு வந்திருக்கோம் என்று சொன்னதும் விஜயா அப்படியாடா என்று ரொம்ப சந்தோஷப்பட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு கீழே வருகிறார்.

மனோஜ் காரோட விலை நாலு லட்சம் ரூபாய் என்று பெருமையோடு சொல்ல முத்து காரை தட்டி பார்த்து சுத்தி பார்த்து எதுக்குடா இவ்வளவு கொடுத்து வாங்கின இரண்டரை லட்சமே இதுக்கு அதிகம் என்று சொல்கிறார். மனோஜ் அதெல்லாம் நான் நல்லா விசாரிச்சு தான் வாங்கி இருக்கேன் என்று சொல்ல அண்ணாமலை இப்போது எதற்கு கார் என்ன கேள்வி கேட்க பிசினஸ் ஆரம்பிக்கப் போற இல்ல நாலு இடத்துக்கு பிசினஸ் விஷயமா போக வேண்டியது இருக்கும். ஆட்டோலயும் பஸ்லையும் போனா நல்லா இருக்காது அதனாலதான் வாங்கினேன் என்று சொல்கிறார்.

ரவி என்ன பேசினது ஆரம்பிக்க போற என்று கேட்க அதை பத்தி இதுக்கு அப்புறம் தான் யோசிக்கணும் என்று மனோஜ் சொல்கிறார். அதன் பிறகு ரவி மனோஜிடம் ட்ரீட் கேட்கிறார். முதலில் முடியாது என சொல்லும் மனோஜ் பிறகு ஒரு பீர் தான் வாங்கித் தருவேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக மொட்டை மாடியில் இவர்கள் மூவரும் ஒன்று கூட ஆளுக்கு ஒரு பீர் என மூன்று பீர் வாங்கி வந்திருக்கிறார் மனோஜ். முத்து எனக்கு வேண்டாம் நான் குடிக்காத போது என்ன வச்சு செஞ்சீங்க இன்னைக்கு குடிக்கிற மூடில்லை என்று சொல்கிறார். பிறகு சொல்லியிருந்த ரெண்டு பீர் வாங்கி இருப்பாங்க என்று மனோஜ் சொல்ல ரவி விடுடா நம்ப ரெண்டு பேரும் ஷேர் பண்ணி குடிச்சுக்கலாம் என்று சொல்கிறார்.

கீழே மீனா ரோகினி மற்றும் ஸ்ருதி ஆகியோர் டீ போட்டு குடித்துக்கொண்டிருக்கின்றனர். மேலே ரவி என்ன பிசினஸ் ஆரம்பிக்க போற என்று கேட்டு ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிச்சிடு என்று ஐடியா கொடுக்கிறார். அடுத்தவன் நாக்கெல்லாம் நம்பி இன்வஸ் பண்ண முடியாது என சொல்கிறார் மனோஜ். அப்படின்னா நாலு கார் வாங்கி வாடகைக்கு விடு என்று முத்து சொல்ல அடுத்தவன் சொகுசா வாழ நான் கார் வாங்கி விடணுமா? அதெல்லாம் முடியாது என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து இவர்கள் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும் மனோஜ் நோ சொல்லி உட்கார்ந்து இடத்திலேயே இருக்கணும் ஆனால் பணம் நிறைய வரணும் என்று சொன்னதும் அதுக்கு நீ கோவில் வாசல்ல உட்கார்ந்து பிச்சை தான் எடுக்கணும் என முத்து கலாய்க்க ரவி சிரிக்கிறார்.

அதேபோல் கீழ ஸ்ருதி ஸ்டுடியோ ஒன்னு ஆரம்பிச்சிடுங்க என்று சொல்ல ரோகிணி அதுக்கு நிறைய செலவாகும் என்று சொல்கிறார். மீனா பெருசா ஒரு பூக்கடை வச்சுடுங்க என்று சொல்ல நீங்க பண்ற பிசினஸ் சொல்லாதீங்க எங்களுக்கு ஏத்த மாதிரி ஏதாச்சு ஐடியா கொடுங்க என்று ரோகிணி சொல்கிறார். சரி உங்க ஹஸ்பண்டுக்கு என்ன ஸ்கில் இருக்கு என்று கேட்க ரோகினி மணி மேனேஜ்மென்ட் நல்லா பண்ணுவாரு என்ன சொல்கிறார். உடனே ஸ்ருதி அங்கலோட ரிட்டயர்மென்ட் பணத்தை எடுத்துட்டு போனாரே அந்த மாதிரியா என்று கிண்டல் அடிக்க மீனா சிரித்து விடுகிறார்.

அடுத்ததாக ரோகிணி மேல இருக்காங்க ஏதாச்சு டிஸ்கஸ் பண்ணுவாங்க என்று சொல்ல சுருதி அவங்க குடிக்க போயிருக்காங்க என்று சொல்கிறார். நான் ரவிக்கு ஒரு பீர் குடிக்க மட்டும் தான் பர்மிஷன் கொடுத்திருக்கேன் என்று சொல்ல ரோகிணி நானும் அப்படித்தான் சொல்லி இருக்கேன் ஆனா முத்துவுக்கு தான் அளவே இல்ல பர்மிஷன் வாங்க வேண்டிய அவசியமும் இல்ல குடிச்சிட்டு தள்ளாடிட்டு வரப்போறாரு பாரு என்று சொல்ல மீனா அவர் இன்னைக்கு குடிக்க மாட்டார் என்று கூறுகிறார்.

சும்மா சொல்லாதீங்க மீனா நீங்க வேணா பாருங்க என்று ரோகினி நக்கலடிக்கிறார். அடுத்ததாக ஸ்ருதி ரவிக்கு போன் போட்டு இன்னுமா முடியல என்று கேட்க ரவி முடிஞ்சிடுச்சு என்று சொல்ல சீக்கிரம் வா என்று கூப்பிடுகிறார். உடனே ரோகிணி மனோஜ்க்கு போன் போட்டு கீழ வா என்று சொல்ல மனோஜ் போதையில் மொட்டை மாடியில் இருந்து குதிக்க போக முத்து இழுத்துப் பிடித்து நிற்க வைக்கிறார். ரவியும் முத்துவும் மனோஜை பிடித்து கீழே இறக்கி அழைத்து வர முதலில் வரும் முத்துவை பார்த்த ரோகினி நான் சொல்லல குடிச்சிட்டு தள்ளாடிட்டு வருவார் என்று அங்க பாருங்க என்று மீனாவை சீண்டுகிறார்.

ஸ்ருதி மனோஜை பார்த்துவிட்டு அவங்க உங்க வீட்டுக்காரர் தான் புடிச்சு கூட்டிட்டு வராங்க நல்லா பாருங்க என்று சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைகிறார். கீழே வந்த மனோஜ் போதையில் அட்ராசிட்டி செய்ய ஒரு அடி கொடுத்து இழுத்துச் செல்கிறார் ரோகிணி. நீ ஸ்டெடியா இருக்க அதனால தப்பிச்ச என்று ரவியை அழைத்துச் செல்கிறார் ஸ்ருதி.

எல்லாரும் போன பிறகு நீங்க எவ்வளவு குடிச்சீங்க என்று மீனா முத்துவிடம் கேட்க நான் குடிக்கவே இல்ல என்று முத்து சொல்ல மீனா பொய் சொல்லாதீங்க உண்மைய சொல்லுங்க என்று மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 11-05-24
jothika lakshu

Recent Posts

“ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது புல்லரிக்கிறது” – தமன்னா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…

16 hours ago

அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ஒப்பந்தமா? – “Jailer 2” புதிய சாதனை!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…

17 hours ago

“Love Insurance Kompany” வசூல் அப்டேட் – முதல் வாரத்தில் ரூ.50 கோடியை தாண்டி சாதனை!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…

17 hours ago

மிஸ்டர் எக்ஸ் திரை விமர்சனம்

இந்தியாவின் ரா (RAW) உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாத்து…

17 hours ago

SINGHA Official Teaser

SINGHA Official Teaser | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran | Adithya Kathir

17 hours ago

Kattalan Tamil Trailer Cubes

Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…

2 days ago