baakiyalakshmi-serial-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சோபாவில் ஏதோ ஒரு சிந்தனையில் உட்கார்ந்து இருக்க ராமமூர்த்தி என்னாச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க என்று கேட்க ஒன்றும் இல்லையென்று எழுந்து தண்ணீர் குடிக்க போகும் போது எதிரே ராதிகா வர இருவரும் முறைத்து கொள்வதை பார்த்து ராமமூர்த்தி குழப்பம் அடைகிறார்.
அதன் பிறகு ராதிகா அவரது அம்மா வீட்டுக்கு வந்து கோபி அவங்க அம்மாகிட்ட விஷயத்தை சொல்லிட்டாங்க ஆனா அவங்க அம்மா குழந்தையை கலைக்க சொல்றாங்க என்று சொல்ல கமலா அந்த பொம்பள என்ன நெனச்சிட்டு இருக்கு என்று கோபப்பட்டு கிளம்ப ராதிகா இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார். கோபியும் எதுவும் பேச மாட்டாரு என்று ராதிகா வருத்தப்பட நல்ல ஆளை தேடி படிச்சு கல்யாணம் பண்ண என்று கமலா சலித்துக் கொள்கிறார்.
பிறகு யார் என்ன சொன்னாலும் சரி நீ குழந்தை விஷயத்துல உறுதியா இருக்கணும் இந்த குழந்தை தான் உங்களுக்கு ஒரு பிடிப்பு என்று சொல்கிறார். அடுத்ததாக கோபி வீட்டுக்கு வர ஈஸ்வரி பக்கத்தில் போய் உட்கார அவரும் எதுவும் பேசாமல் இருக்க எழுந்து மேலே செல்கிறார்.
படிக்கட்டின் அருகே வந்ததும் ராதிகா ஞாபகம் வந்து அங்கேயே நின்று புலம்ப இதை பாக்கியா பார்த்து விடுகிறார். ஈஸ்வரி இடம் வந்து சப்பாத்திக்கு குருமா வேணுமா இல்ல தொக்கு வேணுமா என்று கேட்க கோபி இங்க உயிர் போற அளவுக்கு பிரச்சனை போயிட்டு இருக்கு இவளுக்கு குருமா வேணுமா தொக்கு வேணுமா இதெல்லாம் ரொம்ப அவசியம் என்று புலம்புகிறார்.
மேல போறத விட அம்மா பக்கத்தில் இருக்கிறது தான் சேஃப் என திரும்பவும் சோபாவில் வந்து உட்கார்ந்து விட ராதிகா தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து நைட்டுக்குள்ள விஷயத்தை சொல்றேனு சொன்னிங்க சொல்லுங்க என்று ஆப்பு வைக்க ஈஸ்வரி அதெல்லாம் சொல்ல மாட்டான் என்று பேச மூணு பேரும் ரகசியமாக பேசிக்கொள்வதை பார்த்து உங்களுக்குள்ள அப்படி என்னதான் போகுது என்று ராமமூர்த்தி கேட்கிறார்.
ராதிகா கோபி உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனுமாம் என்று சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் கிடையாது என்று கோபப்படுகிறார். ராதிகா இனியாவை கூப்பிட்டு எல்லாரையும் கூட்டிட்டு வா உங்க அப்பா ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும் என்று சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லியும் இனியா எல்லாரையும் கூட்டி வந்து நிற்க வைக்கிறார்.
இதையெல்லாம் பார்த்து பாக்கியா பாப்கான் ரெடி பண்ணி டைனிங் டேபிள் அருகே கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக உட்கார்ந்து சாப்பிட தொடங்குகிறார். கோபி இதை பார்த்து இன்னும் அதிர்ச்சி அடைகிறார். எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க ஈஸ்வரி ஒன்றும் இல்லை ராதிகா கோபி ஏதோ முக்கியமானது சொல்லனும்னு சொன்னாரு என்று சொல்ல சொல்கிறார்.
கோபி விஷயத்தை சொல்ல முடியாமல் தடுமாற இனியா பாக்யாவை பார்த்ததும் அம்மா உனக்காக தெரியுமா என்று கேட்க எல்லோரும் சொல்லப் போறீங்களா இல்லையா என்று கோபியை டார்ச்சர் செய்ய தொடங்க பாக்கியா எழுந்து வந்து உங்க அப்பா சொல்ல நினைக்கிறேன் சொல்ல முடியாம தயங்குற அந்த நல்ல விஷயத்தை நான் சொல்றேன் என்று சொல்கிறார்.
உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு அதாவது உங்க அப்பாவோட வைஃப் பிரக்னண்டா இருக்காங்க என்ற உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கோபி எதுவும் பேச முடியாமல் மிரண்டு போய் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja |…
KITTI Movie Teaser | #MurugaaASHOK as #AKB |Thirumaran | Nisha | Sangavi | Simuadvani
Chala Happy Nenu Lyrical Video Song (Tamil) | Beep Tamil Movie | L. Shanmuga Sundar…
Bethlehem Kudumba Unit Official Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju |…
Ennachu Lyrical Video | Magenta | Shanthnu | Vaaheesan | Dharan Kumar | Anjali |…
Jai Ho Lyrical Video | Operation Tral | Sudhir Yaduvanshi | Jayasurya | Ratheesh Vega