தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விஜயா அண்ணாமலையிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க பட்டையுடன் வரும் முத்து வீட்டு வாசலில் நின்று அம்மா தாயே கருமாரி என்று மந்திரத்தை சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைய சாமி வந்தது போல இந்த வீட்டுக்குள் கெட்ட சக்தி இருக்கு அது எனக்கு தெரியுது என்று சொல்ல எல்லோரும் பதற்றம் அடைகின்றனர்.
பிறகு நகையை எடுத்தவங்களை கண்டுபிடிக்க சாமியார் ஒருத்தரை பார்த்தேன் அவர் எலுமிச்சம் பழத்தை மந்திரிச்சு கொடுத்திருக்காரு என்று தனது கையை திறந்து காட்டுகிறார். இத வீட்டு பூஜை அறையில் வச்சா நகையை எடுத்தவங்க வாய் 24 மணி நேரத்தில் கோணையாக்கி விடும் என்று சொல்ல விஜயா மற்றும் மனோஜ் அதிர்ச்சி அடைகின்றனர்.
முத்து பழத்தைக் கொண்டு போய் பூஜை அறையில் வைக்க விஜயா அதை தடுக்க நீங்க எதுக்கு பயப்படுறீங்க என்று கேட்க எனக்கு ஒன்னும் பயமில்லை என்று சொல்ல மனோஜும் யாருக்காவது ஏதாவது ஆகப்போகுது என்று சொல்ல முத்து எலுமிச்சம்பழத்தை எடுத்தவங்களுக்கு மட்டும்தான் வாய் கோனையாகும் மத்த யாருக்கும் எதுவும் நடக்காது என்று சொல்கிறார்.
ஒரு பக்கம் விஜயா மற்றும் மனோஜ் பயத்தில் இருக்க இருவருக்கும் வாய் கோணையாகி விட்டது போல தோன்ற பயந்து நடுங்குகின்றனர். ரோகினி ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகல பயப்படாதீங்க என்று கூல் செய்கிறாள். மறுபக்கம் மீனா முத்துவிடம் எந்த சாமியார் போய் பார்த்தீங்க என்று கேட்க அவர் எலுமிச்சம்பழம் கதையை சொல்ல மீனா பொய் சொன்னிங்களா என்று கேட்க இல்ல பொரி வச்சிருக்கேன் அவங்களா கண்டிப்பா வந்து மாட்டுவாங்க என்று தனது திட்டத்தை சொல்கிறார்.
அதேபோல் ரவி மற்றும் ஸ்ருதி கேரளாவில் இந்த மாதிரி எல்லாம் மாந்திரீகம் பண்ணுவாங்க.. என் அப்பா சொல்லி இருக்காரு என்று பேசிக் கொண்ட மீனா அந்த வழியாக வர அவரை கூப்பிட்டு முத்து எந்த சாமியாரை பார்த்தாரு என்று கேட்க மீனா முத்துவின் திட்டத்தை சொல்ல சுருதி இதுவும் நல்லா ஐடியா தான் என்று சொல்கிறார்.
அடுத்து மனோஜ்க்கு முத்து கொண்டு வந்து வைத்த எலுமிச்சை பழம் கண்ணு முன்னாடி வந்து வந்து போக தூக்கம் வராமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…
மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…