Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா வெளியிட்ட சீக்ரெட், வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. வேலைக்காரன் சீரியல் மூலமாக நடிக்க வந்த இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியல் தான் மிகப்பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது.

இதன் மூலமாக தற்போது தெலுகு மலையாளம் என மற்ற இரண்டு மொழி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி அந்த நிலையில் கோமதி பிரியா அளித்த பேட்டி ஒன்று முதல் முறையாக எனது குடும்பத்திற்கு தெரியாமல் தான் சீரியலில் நடித்தேன் என தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு டிவியில் என்னை பார்த்துவிட்டு அந்த பொண்ணு உன்னை மாதிரியே இருக்கு என்று சொன்னாங்க. அப்போதுதான் நான்தான் நடித்திருக்கிறேன் என்ற உண்மையை உடைத்தேன். உனக்கு இதெல்லாம் தெரியுமா என ஆச்சரியத்தோடு கேட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Siragadikka aasai Meena revealed secret
Siragadikka aasai Meena revealed secret