Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘அரசன்’ X தளத்தில் சிம்பு செய்த ட்வீட் வைரலாகி வருகிறது

Simbu's tweet on 'Arasan' X site is going viral

‘அரசன்’ X தளத்தில் சிம்பு செய்த ட்வீட் வைரலாகி வருகிறது

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், சிம்புவின் நடிப்பு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது.

இந்நிலையில், ‘தக் லைப்’ படத்தை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்றதாகவும் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.