Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சண்முக பாண்டியன் – மித்ரன் ஜவஹர் கூட்டணி கொம்புசீவிக்கு பிறகு புதிய படம் உறுதி!

Shanmuga Pandian – Mithran Jawahar alliance: New film confirmed after Kombuseevi!

சண்முக பாண்டியன் – மித்ரன் ஜவஹர் கூட்டணி கொம்புசீவிக்கு பிறகு புதிய படம் உறுதி!

‘படைத்தலைவன்’ என்ற படத்தை தொடர்ந்து சண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம் ‘கொம்புசீவி’. பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகிவுள்ளது.
இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் ஸ்டார் சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சண்முகப் பாண்டியன் உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம், யாரடி நீ மோகினி மற்றும் உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர், தற்போது மாதவன் நடித்து வரும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த இடைவெளியில் சண்முகப் பாண்டியன் நடிக்கும் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் மித்ரன்.

Shanmuga Pandian – Mithran Jawahar alliance: New film confirmed after Kombuseevi!
Shanmuga Pandian – Mithran Jawahar alliance: New film confirmed after Kombuseevi!