1992ல் “தீவானா” எனும் தனது முதல் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதித்தவர் ஷாருக் கான் (58).
30 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களை வழங்கி, சக முன்னணி கதாநாயகர்களான சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோரில், “கிங் கான்” (King Khan) என அழைக்கப்படும் ஷாருக், சில தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த 2023ல், ஜவான், பதான், மற்றும் டன்கி என 3 தொடர் வெற்றிப்படங்களை அளித்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 14 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாய் நகரில், உலக அரசுகளின் உச்சி மாநாடு (World Governments Summit 2024) நடந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாடிய ஷாருக் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவரிடம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என கேட்கப்பட்டது.
அதற்கு ஷாருக் பதிலளித்ததாவது:
நான் வெளிப்படையாக பலமுறை இதற்கு பதிலளித்து விட்டேன். ஆனால், என்னை எவரும் நம்ப மறுக்கின்றனர். இருந்தும் மீண்டும் சொல்கிறேன்.
எனக்கு இந்தியாவிலிருந்து வெளியே ஹாலிவுட் உட்பட எந்த அன்னிய மொழி படங்களிலும் நடிக்க அழைப்பு வரவில்லை.
மேற்கத்திய திரைப்பட துறையை சார்ந்த பலருடன் நான் பழகியுள்ளேன். எனக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைத்துறையை சார்ந்த பல திறமையானவர்களுடன் நல்ல நட்பும் உண்டு.
ஆனால், என்னை எவரும் ஒரு நல்ல வேடத்திற்காக இதுவரை அங்கிருந்து அழைத்ததில்லை.
என்னை ஏற்று கொள்ள கூடிய பார்வையாளர்களுக்கு பிடித்தமான படங்கள் அளிக்க நான் இன்னும் கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…