சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் அன்பு என்ற புதிய சேவையை தொடங்கி வைத்த சமந்தா மற்றும் டாக்டர் மரியஜீனா ஜான்சன்

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அன்பு என்ற புதிய ஆரோக்கிய மேம்பாட்டிற்கான “ஷீ ஃபர்ஸ்ட்” சேவையை டாக்டர் மரியஜீனா ஜான்சன் மற்றும் நடிகை சமந்தா தொடங்கி வைத்தனர்.

சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மே மாதம் 5 ஆம் தேதி, 2024 அன்று பெண்கள் மேம்பாட்டுக்கான “அன்பு” என்ற புதிய சேவையை பெருமையுடன் தொடங்கியது.

பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அன்பு ஹெல்த் கார்டுகளை பெண் ஊழியர்கள், மாணவிகள் மற்றும் பொது வாழ்வில் உள்ள பெண்களுக்கு சத்யபாமாவின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் அவர்கள் வழங்கினார். வரவேற்புரையை துணைத் தலைவர் திருமதி.மரிய பெர்னாடெட் தமிழரசி மற்றும் இந்த முயற்சியின் சிறப்பம்சங்களை துணைத் தலைவர் திரு.கேத்தரின் ஜான்சன் பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவில் தலைவர் டாக்டர் மேரி ஜான்சன் மற்றும் துணைத் தலைவர் திரு.அருள் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

வேந்தர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் அவர்கள் தனது உரையில், ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது குடும்பத்தின் அஸ்திவாரமாகத் தொடர உதவுவதற்கு மிக முக்கியமான அம்சமாகும் என்று வலியுறுத்தினார். இந்த முயற்சி ஒவ்வொரு பெண்ணின் மனதையும் சென்றடைய மேற்கொண்ட முயற்சியாகக் குறிப்பிட்டு, பெண்களிடையே நல்வாழ்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தம் வகையில் துவக்கியுள்ளோம் என்றார். “ஆரோக்கியமான பெண் குடும்பத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார்” என்று கூறி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பெண்கள் சுய சுகாதார முன்னேற்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

Satyabhama Institute of Science and Technology launched a new service of Anbu

இந்த நிகழ்விற்கு புகழ்பெற்ற நடிகை சமந்தா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார், அவர் தன்னை சத்யபாமா குடும்பத்துடன் இணைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், இந்த சேவை முயற்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் “பெண்கள் தங்கள் நலனைப் பற்றி சிந்திப்பது சுயநலம் என்று கருதி முக்கியத்துவம் தருவதில்லை” மற்றும் தற்போது பெண்களின் ஆரோக்கியம் பற்றிய புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது அதனால் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை என்றார். சத்யபாமாவின் அன்பு ஹெல்த் கார்டு முயற்சி இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று நடிகை சமந்தா கூறினார்.

இந்த ஹெல்த் கார்டுகள் மூலம் பொது மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் தரமான பராமரிப்பு சேவைகளை வழங்கும் சத்யபாமா மருத்துவமனையில் மேமோகிராம், இரத்த பரிசோதனை பகுப்பாய்வு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, கண் பராமரிப்பு, வாய்வழி சுகாதாரம், வயிற்று ஸ்கேன், ஹெச்பி எண்ணிக்கை ஆகியவற்றை இலவசமாகப் பெறலாம்.

Satyabhama Institute of Science and Technology launched a new service of Anbu

சத்யபாமா மருத்துவமனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மிக உயர்ந்த தரமான பராமரிப்பை வழங்க உறுதிபூண்டுள்ளது.

பெண்களின் ஆரோக்கியம் மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அடுத்த தலைமுறையை வாழ்வில் கொண்டு வருவது பெண்கள் தான். எனவே, அவர்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது முக்கியம்.

சத்யபாமா பொது மருத்துவமனையில் பின்வரும் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆலோசனை சேவைகள்:
கண்
காது மூக்கு தொண்டை
மகளிர் நோய் மருத்துவ இயல்
மருத்துவ சேவைகள்
பொது அறுவை சிகிச்சை
குழந்தை மருத்துவம்
இரையகக் குடலியவியல் (Gastroentrology)
நீரிழிவு நோய்
பல்
இரத்த சோதனை:
முழுமையான இரத்த எண்ணிக்கை
கல்லீரல் செயல்பாடு சோதனை
சிறுநீரக செயல்பாடு சோதனை
எலக்ட்ரோலைட்டுகள்
HbA1c
டைபாய்டு பரிசோதனை

மற்ற சேவைகள்
எக்ஸ்ரே
ஈசிஜி
அனைத்து பகுதிகளிலும் அல்ட்ராசவுண்ட் குறிப்பாக வயிறு பகுதி
மேமோகிராம்
தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி

“ஒவ்வொரு பெண்ணும் கண்ணியம், மரியாதை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் நடத்தப்படும் உங்கள் ஆரோக்கியத்திற்கான பயணம் இங்கே தொடங்குகிறது” என்று சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் கூறினார்.

jothika lakshu

Recent Posts

எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு.!!

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…

3 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

20 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

20 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

21 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

21 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

21 hours ago