வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் ரஞ்சித் நந்தினியின் கழுத்தை துணியால் இருக்கி கொ* செய்துவிட்டு போவது போல இருக்க பிறகுதான் அது சூர்யாவின் கனவு என தெரிய வருகிறது.சூர்யாவின் தூக்கம் கலைந்து விட, ரஞ்சித் பற்றி சூர்யா குழப்பதில் யோசிக்கிறார்.நந்தினி எதிரில் உட்கார்ந்து எதுவும் ஆகாது என்று சொல்லி விட்டு படுத்து விடுகிறார். மறுநாள் காலையில் கிச்சனில் கல்யாணம் வேலை பார்த்துக் கொண்டிருக்க நந்தினி வந்து காபி ரெடியா என்று கேட்க உடனே கல்யாணம் ஓடி வந்து துண்டை நீட்டி இதுக்கு மேல கிச்சனில் உனக்கு இடம் கிடையாது சின்னையா உன்ன கிச்சன்ல விடக்கூடாது என்று சொன்னதாக கோபமாக சொல்லிக் கொண்டிருக்க ஒரு பக்கம் நந்தினி வழக்கம் போல் கிச்சனுக்குள் போக பதறிப்போன கல்யாணம் அதையும் மீறி கிச்சனுக்கு வந்தால் என்ன வேலை விட்டு தூக்கிடுவேன்னு சொல்லிட்டாங்க என்று கெஞ்சி கிச்சன் விட்டு வெளியே போக சொல்லுகிறார். ஆனால் நந்தினி வெளியில் போக மறுக்க கல்யாணம் கால்ல கூட விழறேன் என்று சொல்ல நந்தினி வேறு வழியில்லாமல் வெளியில் சென்று விடுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி ஹாலில் வந்து உட்கார்ந்து அண்ணன் அண்ணி இடம் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மாதவி வருகிறார். சுரேகா என்ன பண்றா என்று கேட்க நைட் ஃபுல்லா அழுதுட்டு இப்பதான் தூங்கனா என்று சொல்ல சுந்தரவல்லி இது மாதிரி பண்ற ஆட்களை நடுரோட்டில் நிக்க வச்சு சுடனும் என்று சொல்லுகிறார்.

இந்த நேரம் பார்த்து நியூஸில் அந்த டிராவல் பேக் குறித்து போட ரஞ்சித் அம்மா டிவியை ஆஃப் பண்ணிவிட்டு போகுமாறு சொல்லுகிறார். பத்திரிக்கையில் பெயர் எழுதவும், அவர்களுக்குப் பின்னால் படிப்பு போடுவதெல்லாம் குறித்து லிஸ்ட் எழுதிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா நந்தினிக்காக ஏற்பாடு செய்த இங்கிலீஷ் டீச்சர் அழைத்து கொண்டு வருகிறார் அப்போது ஹரிதா உன் பேர் பின்னாடி எம்பிஏன்னு மட்டும் போட்டா போதும் ஆனா நீ கட்டிக்கிட்டு வந்திருக்கியே அதுக்கு பேரு பின்னாடி என்ன போடுறது என்று கிண்டல் அடிக்கிறார். உடனே இவரு யார் தெரியுமா இங்கிலீஷ் டீச்சர் என் பொண்டாட்டிக்கு இவர்தான் கிளாஸ் எடுக்க போறாரு என்று சொல்லுகிறார். கூடிய சீக்கிரம் உன்கூட அவ இங்கிலீஷில் பேசுவா என்று சொல்ல, நீ கூட்டிக்கிட்டு வந்திருக்க டீச்சராலே என் கூட இங்கிலீஷ்ல பேச முடியாது என்று சொல்லுகிறார். ஆனால் சூர்யா ஒரு நாள் என் நந்தினி உன்ன விட மேல வளர்ந்து காட்டுவா அப்போ உன் முன்னாடி நான் சிரிக்க போறேன் பாரு சிரிப்பு என்று சொல்லிவிட்டு சூர்யா அவரை அழைத்துச் சென்று விடுகிறார். ரூமுக்கு வந்து நந்தினியிடம் இங்கிலீஷ் டீச்சரை அறிமுகப்படுத்தி வைத்து இவதான் உங்களோட ஸ்டுடென்ட் நீங்க கிளாஸ் ஆரம்பிங்க என்று சொல்லி போர்டு செட் பண்ணி வைத்துவிட்டு இனிமேல் நந்தினி உங்க பொறுப்பு இவங்க படிச்சா போதும் என்று சொல்ல, இங்கிலீஷ் டீச்சர் அவரை உட்கார சொல்லுகிறார். நோட் கொடுத்து நந்தினியை ஏபிசிடி எழுத சொல்ல நந்தினி எழுதுகிறார். இதனை ஹரிதா,மாதவி அசோகன் மூவரும் வெளியில் இருந்து பார்க்கின்றனர். நந்தினியை ஏபிசிடி எழுதி முடிக்க பிறகு அவர் நான் சின்ன சின்ன வார்த்தை சொல்ற அதை எழுதுங்க என்று சொல்லுகிறார்.

சுந்தரவல்லி அவர்களைக் கூப்பிட்டு போய் ஆவுற வேலையை பாருங்கள் என்று சொல்லி திட்டி அனுப்ப, ஹரிதா வந்து கிண்டல் அடிக்க சூர்யா ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போயிடு என்று கோபப்பட்டு சொல்ல, அந்த நேரம் பார்த்து ஹரிதாவின் அப்பா வந்து வெளியில் அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு நந்தினி வார்த்தையில் சின்ன சின்ன பிழைகளை செய்திருக்க அவருடைய இங்கிலீஷ் டீச்சர் திருத்தி சொல்லிக் கொடுக்க சூர்யாவிற்கு ஒரு வேலை வர அவர் கிளம்பி விடுகிறார். உடனே நந்தினி வந்து வெளியில் வந்து எட்டி பார்த்து சந்தோஷப்பட்டு டீச்சரிடம் வந்து இன்னைக்கு கிளாஸ் போதும் என்று சொல்லி அனுப்பிவிட்டு சந்தோஷப்படுகிறார். சந்தோஷமாக கிச்சனுக்கு ஓடிவந்து கல்யாணத்திடம் இப்ப போய் யாராவது படிப்பார்களா அவர் போன உடனே டீச்சரை அனுப்பி வெச்சிட்டேன் என்று சந்தோஷமாக சொல்லுகிறார். இத்தனை வயசுக்கு மேல எப்படி படிப்பு ஏறும் என்னால படிக்க முடியாது எனக்கு நிறைய வேலை இருக்கு என்று சொல்ல நீ கிச்சனுக்குள்ள வரவே கூடாது என்று சொல்கிறார்.

உனக்கு படிக்க பிடிக்கலைன்னா படிக்காத என்னுடைய ஏரியாகுள்ள வந்து டிஸ்டர்ப் பண்ணாத நான் சின்னையா ஓட ஆர்டரை மீறமாட்டேன் என்று சொல்ல, என்ன சமைக்க கூடாதுன்னு மட்டும் தானே சொல்லி இருக்காரு என்று சொல்ல இன்னைக்கு வெள்ளிக்கிழமை நான் சாம்பிராணி போட போகிறேன் என்று சொல்லுகிறார். நம்ம வீட்டு மேல இருக்கிற கண் திருஷ்டி போக சாம்பிராணி போடணும்னு என்னோட அம்மாச்சி சொல்லி இருக்காங்க என்று சொல்ல, சாம்பிராணி போட கரிக்கு எங்க போவ என்று கேட்க, நந்தினி அதுக்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டுகிறார். பிறகு சாம்பிராணி எடுத்து வீட்டுக்குள் போட புகையாக இருப்பதை பார்த்து குடும்பத்தினர் வந்து விடுகின்றனர். ஹரிதா எனக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கு என்று சொல்லி நந்தினியின் கன்னத்தில் அரைகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial promo update 14-03-26
jothika lakshu

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

13 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

13 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

13 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

19 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

19 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

19 hours ago