samuthirakani-viral-post-about-thunivu movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் துணிவு திரைப்படம் வெளியாகிறது.
இதில் எக்கச்சக்கமான முன்னணி நடிகர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியிட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், டப்பிங் பணிகள் மற்றும் ஸ்ட்ராங் சூட்டிங் உள்ளிட்டவை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சமுத்திரகனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் அனைவருக்கும் ஏற்கனவே தெரியும். ஆனால் அவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்ற சஸ்பென்சை சமுத்திரகனி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது அப்பதிவில் போலீஸ் கெட்டப்பில் இயக்குனர் வினோத்துடன் மாசாக இருக்கும் அவரது புகைப்படத்தை பதிவிட்டு ‘துணிவு பரபரப்பாக’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இப்படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தற்போது இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…