indian-2-movie-shooting details
இந்திய திரை உலகில் ஆண்டவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைகளை தாண்டி நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தினை லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் உடல்நலம் தற்போது தேறியுள்ள நிலையில் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.
Jolliya Iruntha Oruthan Teaser | JIO | Jiiva, Sudhakar | Yuvan Shankar Raja | Rajesh…
Oh Sukumari Lyrical Video (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath | Bharath Manchiraju
Con City Official Trailer | Arjun Das | Anna Ben | Yogi Babu | Sean…
Nagabandham Tamil Official Trailer | Abhishek Nama | Virat Karrna | Nabha Natesh
Rise Of Linga Lyric Video | Magudam (Tamil) | Vishal | GV Prakash | Anjali…
Black Gold Official Trailer | Vetri, Priyalaya | Dheeran Arunkumar | Gavaskar Avinash