சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் திருமணம், இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே சமந்தா டுவிட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை சமந்தாவும், நாக சைத்தன்யாவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர்.
இதையடுத்து தற்போது டுவிட்டரில் மீண்டும் தனது பெயரை திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல, சமந்தா எனவும் யூசர் நேமை சமந்தா பிரபு எனவும் மாற்றியிருக்கிறார். நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, அவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை இணைத்து சமந்தா அக்கினேனி என வைத்திருந்தார். தற்போது நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு பழையபடி தனது பெயரை சமந்தா பிரபு என மாற்றியிருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…
தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள 'தி ஒடிஸி' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோமரின்…
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti