‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் சாய் பல்லவி

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர்.

இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படம் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது.

இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார்.

இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நிதின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அய்யப்பன் மனைவி கண்ணம்மா கதாபாத்திரம் தான், தெலுங்கு ரீமேக்கில் அந்த கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். அதாவது அவர் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

Suresh

Recent Posts

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

9 hours ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

14 hours ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

14 hours ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

14 hours ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

15 hours ago

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…

15 hours ago