தாமதமாகும் இந்தியன் 2…. 4 ஹீரோக்களுடன் அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகும் ஷங்கர்?

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.

இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை தற்போது மீண்டும் தொடங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லாக்டவுனில் இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை ஷங்கர் முடித்துவிட்டாராம். இப்படத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்.

மேலும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களையும் நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

1 day ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

1 day ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

1 day ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

1 day ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

1 day ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

2 days ago