Categories: NewsTamil News

ஆங்கில படங்களுக்கு இசையமைத்த தமிழ் இசையமைப்பாளர் RS.ரவிப்ரியன்!

அக்கால பிரபல சங்கீத வித்வான் சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் அவர்களின் பேரன் தான் இசையமைப்பாளர் RS.ரவிப்ரியன்.

இவர் எஸ்.டி.தமிழரசன் தயாரிப்பில் ஜீவரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட “மேகம் “படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் சென்றடைந்தது. தொடர்ந்து சாந்தன் எனும் படத்திற்கும் இசையமைத்தார்.

மூன்று மொழிகளில் தயாராகி வரும் ஹை.5 எனும் படத்திற்கும் வடசேரி, கருவறை மொழி, போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

உலக இசை வரலாற்றிலேயே முதல் முதலாக “காற்று ” எனும் ஆல்பத்திற்கு பா.விஜய், சினேகன், கலைக்குமார் பாடல்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, மனோ, சுஜாதா, ஸ்வர்ணலதா உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன், கிருஷ்ணராஜ், திப்பு, ஹரிணி போன்ற 22 பிரபல பின்னணி பாடகர்களை பாட வைத்து சாதனை படைத்துள்ளார்.

Honolulu எனும் சர்வதேச விருது பெற்ற “Strip Mall” எனும் ஆங்கில படத்திற்கும், ஸ்விட்சர்லாந்தில் உருவான “இது காலம் “, கனடா மற்றும் ஆசிய நாடுகளில் வெளிவந்த “மெதுவாக உன்னைத் தொட்டு ” எனும் தமிழ் படங்களுக்கும், மெமோரிஸ் எனும் Single Track ஹிந்தி வீடியோ பாடலுக்கும், சர்வம் சக்திமயம் எனும் அம்மன் பக்தி பாடல்களுக்கும் இசையமைத்து உள்ளார்.

 

கனடா மற்றும் சார்க் நாடுகளின் சிறந்த பாடகர் விருதையும் பெற்ற இவர் மாறுபட்ட மெட்டுக்களை கொடுத்து தமிழ் சினிமாவின் ஒரு உச்சத்தை அடைய வேண்டும் என்பதே இவரது ஆசை.

admin

Recent Posts

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

3 hours ago

Vaan Meeru Video Song

Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…

4 hours ago

Maayapoove Lyrical Video Tamil

Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

4 hours ago

Neengalellam Lyrical Video

Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj

4 hours ago

DHIK.DHIK..DHIK… Official Teaser

DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan

4 hours ago

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

1 day ago