ரவுடிசம் செய்து வரும் பாரதிராஜாவுடன் வேலை பார்த்து வருகிறார் வசந்த் ரவி. பாரதிராஜாவின் மகனுக்கும் வசந்த் ரவிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் வசந்த் ரவியின் அம்மா ரோகிணியை கொலை செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் வசந்த் ரவி, பாரதிராஜா மகனை கொல்கிறார்.

ஜெயிலுக்கு சென்று பல ஆண்டுகள் கழித்து திரும்பும் வசந்த் ரவி, திருந்தி வாழ முயற்சி செய்கிறார். ஆனால், பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்ய துடிக்கிறார். இறுதியில் பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்தாரா? வசந்த் ரவி பாரதிராஜாவின் தொந்தரவை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா, தங்கை பாசம், சண்டை, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா ரவி, கோபம், பாசம் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார். படம் பார்ப்பவர்களை தன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரோகிணி.

பாரதிராஜா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். வேறொரு பாரதிராஜாவை பார்க்க முடிகிறது. மகனை கொன்றவனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று துடிப்பது பாசத்தின் உச்சம். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ரவுடிசம், பழிக்கு பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். வழக்கமான கதை என்றாலும் அதில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். திரைக்கதை நகர்வுக்கு ஏற்றார் போல் ஒரு தலைப்பு வைத்து இயக்கி இருப்பது சிறப்பு.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அதுபோல் தர்புகா சிவாவின் இசையும் வலு சேர்த்து இருக்கிறது. கதையோடு பயணிக்கும் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

மொத்தத்தில் ‘ராக்கி’ வீரன்.

Suresh

Recent Posts

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை

ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…

2 hours ago

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…

2 hours ago

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…

2 hours ago

சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை – மனம் திறந்த ராஷி கன்னா

சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்​கமறு, திருச்சிற்றம்​பலம், அரண்​மனை…

2 hours ago

விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..!

விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…

2 hours ago

பார்வதி சொன்ன வார்த்தை, எதிரெதிராய் நிற்கும் மகேஷ் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு,சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

3 hours ago