Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மூக்குத்தி அம்மன் 2 முற்றிலும் வேறுபட்ட படம்.. ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்.!!

RJ Balaji's information about Mookkuthi Amman 2

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தனர் ஆனால் ஆர் ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கவில்லை.

இரண்டாம் பாகத்தை சுந்தர் சி தான் இயக்கி வருகிறார் இந்த நிலையில் இந்த படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசியிருப்பது தற்போது வெளியாகியுள்ளது. அதாவது முதல் பாகத்திற்கும் ஒரு இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என ஒருபோதும் நான் எண்ணியதில்லை ஆனால் தயாரிப்பாளர்கள் விரும்பியதால் சுந்தர் சி நயன்தாரா மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் என்னிடம் பேசினார்கள் என்று கூறியுள்ளார்.

இது அவர்களுடைய தயாரிப்பு என்பதால் அந்த தலைப்பை மட்டும் எடுத்து இருக்கிறார்கள் தவிர ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம் என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

RJ Balaji's information about Mookkuthi Amman 2