Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரெட்ரோ’ வசூல் நிலவரம்: 11 நாட்களில் உலகளவில் இவ்வளவு கோடியா?

retro movie 11 days collection update

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

முதல் நான்கு நாட்களில் கணிசமான வசூலை ஈட்டிய இப்படம், அதன் பிறகு சற்று தொய்வை சந்தித்ததாக தகவல்கள் வந்தன. இந்நிலையில், படம் வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலக அளவில் ‘ரெட்ரோ’ செய்துள்ள மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் இதுவரை உலகளவில் 95.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சூர்யாவின் ரசிகர்கள் இந்த வசூல் நிலவரத்தால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

retro movie 11 days collection update

retro movie 11 days collection update