Rashmika's action avatar in Allu Arjun's Atlee directorial
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம்
அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.
இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தப் படத்துக்குப் பிரபல ஜப்பானிய-பிரிட்டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநருமான ஹோகுடோ கோனிஷி பணியாற்றி உள்ளார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இதுபற்றி மிருணாள் தாக்குர் தெரிவிக்கையில், ‘ஓ அப்படியா? அதில் நடிக்கிறேனா? அது நடப்பதற்காகப் பிரார்த்தியுங்கள். நடந்தால் கொண்டாடுவோம்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர் இதில் நடிக்கவில்லை என தெரிகிறது.
ஆனால், ராஷ்மிகா இப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்குப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்றும் ஆக்சன் காட்சிகளும் அவருக்கு இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. புஷ்பா படங்களுக்குப் பிறகு அல்லு அர்ஜுனுடன் மீண்டும் நடிக்கிறார் ராஷ்மிகா.
இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் இந்த மாதம் 26-ந்தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…
’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம் 'தாய் கிழவி’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார்…
சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..! இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை…
திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்? சிவகார்த்திகேயன் விளக்கம் 'தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், 'திரையுலகில் இருப்பவர்கள் தான்…
"வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயச்செய்து நிறுத்துங்கள் - நடிகர் தனுஷ் தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ்…
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…