ram charan latest tweet viral
95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்றது. இதில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் பெற்றது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. ஆர்.ஆர்.ஆர். சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராம் சரண் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் நம் வாழ்விலும் இந்தியன் சினிமாவிலும் சிறந்த திரைப்படமாக எப்போதும் இருக்கும்.
நான் இப்பொழுதும் கனவில் இருப்பது போல் உணர்கிறேன். ராம் சரண் அறிக்கை உங்களின் அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் கீரவாணி இருவரும் இந்திய திரையுலகின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள். இந்த சிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை அளித்ததற்கு இருவருக்கும் நன்றி. நாட்டு நாட்டு என்பது உலகம் முழுவதும் இருக்கும் ஒரு உணர்வு. இந்த உணர்வை ஒருங்கிணைத்த பாடலாசிரியர் சந்திரபோஸ் , பாடகர்கள் ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா மற்றும் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கு நன்றி.
என் சக நடிகரான ஜுனியர் என்.டி.ஆருக்கும் நன்றி. அண்ணா உங்களுடன் நடனமாடி மீண்டும் சாதனை படைப்பேன் என்று நம்புகிறேன். இனிமையான இணை நடிகராக இருந்ததற்கு நன்றி ஆலியா பட். இந்த விருதான ஒவ்வொரு இந்திய நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்பட பார்வையாளர்களுக்கு சொந்தமானது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…