சுற்றுலா சென்று வந்த ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு

கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் பிரீத் சிங் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்”.

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

rakul preet singh
Suresh

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

1 day ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

1 day ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

1 day ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

1 day ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

1 day ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

1 day ago