தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் இவர் தமிழிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு ரகுல் ப்ரீத் கல்யாண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதயத்தில் தீயாக பரவி வருகின்றன. இதை அடுத்து பலரும் ரகுல் பிரீத் சிங்கிற்க்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram