Rajini-173 movie, Rajini gives a sensational update
Rajini-173 திரைப்படம், பரபரப்பு Update கொடுத்த ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 என தொடர்ந்து ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஃபீல் குட் மூவி செய்ய விரும்பி, கதை தேடும் படலத்தில் இறங்கினார். அவ்வகையில், இளம் இயக்குநர்கள் நித்திலன், ராம்குமார் பாலகிருஷ்ணன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டார். இதில், யாரும் எதிர்பாராத விதமாக சிபி சொன்ன கதையை ரஜினி தேர்வு செய்துள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இச்சூழலில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் ரஜினிகாந்த் வீட்டுக்கு ரசிகர்கள் வருவது வழக்கம். அதன்படி பொங்கலை முன்னிட்டு அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது, ரஜினிகாந்த் கூறும்போது,
‘இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக இருந்தால் தான் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும்’ என்றார்.
ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு நடிக்கும் படம் பற்றித் தெரிவிக்கையில், ‘சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கும் படம் ஏப்ரலில் தொடங்கும். அது பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் படமாக இருக்கும்’ என கூறியுள்ளார். ரஜினி சொன்ன அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது.
எனவே, தலைவர்-173 படம் ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல், அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…