Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகாமியை திட்டிய வள்ளி பாட்டி.. சந்தியா போட்ட திட்டம்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja-rani-2 serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஏறு மதத்தை சார்ந்த ஜெசி அவளுடைய மத ஆழ்காலத்தில் அப்பா அம்மா யார் என்பதை பற்றி வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடாது முழுவதுமாக அதை அனைத்தையும் தூக்கிப் போட்டு விட்டு வர வேண்டும் என கொண்ட சந்தியா இது நிச்சயம் நடக்காத விஷயம் இது ரொம்ப அநியாயம் என பேச குறுக்கிடும் வள்ளி பாட்டி சிவகாமி இதுதான் குடும்பம் நடத்துற லட்சணமா மருமகளை இப்படித்தான் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பாயா நீ புத்திசாலி என்று நினைத்தேன் ஆனா இப்படி ஒரு கேனையா இருக்க என சகட்டு மணிக்கு திட்டுகிறார். எது நடந்தாலும் குடும்ப கவுரவம் முக்கியம் எனக்கு இதுல சுத்தமா விருப்பமில்லை என சொல்லி சென்று விடுகிறார்.

பிறகு சந்தியா நீங்க இப்படி எல்லாம் கண்டிஷன் போட்டா ஜெசி அப்படி ஒரு கல்யாணமே எனக்கு வேண்டாம் நான் தனியாகவே இருந்துக்கிறேன் என முடிவெடுத்தால் அந்த குழந்தை அப்பா என்றும் அப்பா இல்லாமல் வளரும்‌. அது உங்களுக்கு பரவாயில்லையா எனக்கு கேட்க சிவகாமி நீ சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது நான் இல்லை அத்தை அவங்க கிட்ட பேசி ஊர் மக்கள் முன்னாடி பேசி அவங்களுக்கு புரிய வச்சு கல்யாணத்தை உன்னால நடத்த முடியுமா? என சவால் விட ஒரு வேலை இந்த சவாலில் தோற்று விட்டால் என்னத்த செய்வீங்க என சந்தியா கேக்க நீ போலீஸ் ஆக கொடுத்த அனுமதியை திரும்ப வாங்கிப்பேன் நீ வேலைக்கு போகக்கூடாது என அதிர்ச்சி கொடுக்கிறார்.

சந்தியா இந்த சவாலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது என்ன சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்திருந்தால் நான் உடனே முடிவெடுத்து இருப்பேன் ஆனால் ஆதி ஜெசி குழந்தை என மூன்று உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என கூறுகிறார். இதனால் சிவகாமி வேற வழி கிடையாது நீ அப்படியே பேசி சம்மதிக்க வைக்கிறது தான் ஒரே வழி என கூறி விடுகிறார்.

பிறகு சந்தியாவும் சரவணனும் ஒரு வழியாக ஆதி உண்மையை ஒத்து கொண்டது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ ஐபிஎஸ் ஆக வேண்டிய வேலைகள் மட்டும் பாரு என சரவணன் கூறுகிறார். பாட்டியை ஈசியா சம்மதிக்க வைக்கலாம் என சந்தியா கணக்கு போடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 raja-rani-2 serial episode-update

raja-rani-2 serial episode-update