Raja Rani 2 Serial Episode Update 15.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சந்தியா ஓரிடத்தில் உட்கார்ந்து யோசனையில் இருக்க அப்போது சரவணன் அவரைத் தேடி அங்கு வருகிறார். என்ன ஏதோ யோசனையில் இருக்கீங்க என்னாச்சு என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என சந்தியா சொல்ல அர்ச்சனா குழந்தை பற்றி பேசியது பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா என கேட்கிறார்.
இல்லை அர்ச்சனாவைப் பற்றி தான் ஆல்ரெடி தெரியுமே இது அதைவிட ரொம்ப பெரிய விஷயம் நீங்க சொன்ன அதிர்ச்சி அடையக் கூடாது கோவ படக்கூடாது என சந்தியா கூறுகிறார். என்னன்னு சொல்லுங்க என சரவணன் கேட்க விக்கி பார்வதியை பிளாக் மெயில் செய்வது பற்றி சந்தியா கூற இன்னைக்கு அவனுக்கு இருக்கு என கோபத்துடன் அடிக்க கிளம்புகிறார் சரவணன். ஒரு நிமிஷம் நான் சொல்றத முழுசா கேளுங்க என சந்தியா ஐடியா ஒன்றை கூறுகிறார்.
அதன்பிறகு விக்கி பார்வதிக்கு போன் செய்ய சந்தியா சொன்னது போலவே பார்வதி அந்த போட்டோவை வச்சுட்டு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, உன்னுடைய சுண்டு விரல் கூட என் மேல படவே படாது என கூறி போனை வைத்து விடுகிறார். இதனால் கடுப்பான விக்கி உன்னை என்ன பண்றேன் பாரு என பாஸ்கருக்கு போன் போட்டு உங்களை பார்த்து முக்கியமான சில விஷயம் பேசணும் என கூறுகிறார்.
மறுநாள் பாஸ்கரை சந்தித்த போது அந்தப் பார்வையே சரி இல்ல உங்கள கல்யாணம் பண்ணிக்கப் போறது ஒரு பக்கம் இருக்க அவ எனக்கே ரூட்டு போடுறா. நான் சொல்றத கேட்கல இல்ல பாஸ் கிட்ட உங்கள பத்தி தப்பு தப்பா சொல்லி பிரண்ட்ஷிப் பிரித்து விடுவேன் என சொல்லி மிரட்டினா. சரினு அவ சொல்ற இடத்துக்கு போனேன். ரொம்ப மோசமா நடந்துக்கிட்டா நான் அசைந்து கொடுக்கல. ஒரு சிலர் ஃபோட்டோஸ் மட்டும் எடுத்துட்டு வந்தேன் என சொல்லி போட்டோக்களை காட்டுகிறார். இதனையடுத்து பாஸ்கர் விக்கியை பளார் என அறைந்து சரவணன் நேற்று என்னை சந்தித்து எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டார் என கூறுகிறார். இனிமே என் முகத்திலேயே முழிக்க கூடாது என சொல்லிவிட்டு வருகிறார்.
இந்தப் பக்கம் குளத்தங்கரை பக்கத்தில் அமர்ந்து கொண்டு பார்ப்பது அழுது கொண்டிருக்க அவருக்கு சரவணன் சந்தியா ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர். பார்வதி கூட நல்ல பையனா பார்த்து வைத்திருந்த நம்பிக்கை இல்லாத நான் அவனை நம்பி காதலித்தது தப்பு அது இப்போது எங்கு கொண்டு வந்து விட்டு இருக்கு பாருங்க என அழுகிறார். பிறகு பாஸ்கர் அங்கு வர பார்வதி ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து அழுதார். தன்னைப் புரிந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி கூறுகிறார். பாஸ்கரும் அதாவது அது தான் எல்லாமே நல்லபடியா முடிஞ்சு போச்சே என கூறுகிறார்.
பிறகு சரவணன் சந்தியாவுக்கு நன்றி சொல்ல பாஸ்கரும் சந்தியாவுக்கு நன்றி சொல்கிறார். போதும் குடும்பத்தில் உள்ள இப்படி ஒருத்தர் ஒருத்தர் மாத்தி மாத்தி நன்றி சொல்லிக் கிட்டு இருந்தா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க சந்தியா கூறுகிறார். போற வழியில பார்வதி தான் எல்லோருக்கும் ஐஸ் கிரீம் வாங்கி தரனும் என சந்தியா சொல்ல கடையையே நான் வாங்கித் தரேன் ஆனா காசு பாஸ்கர் தான் தரணும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…