Bharathi Kannamma Serial Episode Update 15.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த லட்சுமி ராய்தான் வடிவுகரசி தெரிவித்துள்ள எல்லோரிடமும் எங்க டாக்டர் அப்பாவிற்கு விருது கொடுக்கிறார்கள் என மகிழ்ச்சியாக சொல்லி ஆட்டம் போடுகிறார். பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் செய்து நாளைக்கு லட்சுமி கூட்டிகிட்டு விருது கொடுக்கும் இடத்திற்கு வா என கூறுகிறார்.
இந்த பக்கம் பாரதி வேலை செய்து கொண்டிருக்க அப்போது அங்கு வந்த ஹேமா அவருக்கு சாக்லேட் கொடுத்து வருகிறார். அதன் பின்னர் டாடி இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்காரு. இந்த நேரத்தில் சமையல் அம்மாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்ன உடனே ஓகே சொல்லிவிடுவார் என்று நினைக்கிறேன் என நினைத்து அதைப் பற்றி பேச முடிவு செய்கிறார். பின்னர் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என சொல்லி அம்மா என ஆரம்பித்து பிறகு டாடி என சொல்லுவார்கள் என தெரியல என பயந்து கொண்டு அமைதியாகி விடுகிறாள். பாரதியின் தொடர்ந்து போன் கால் வந்துகொண்டே இருக்க எழுந்து சென்று விடுகிறார்.
மறுநாள் விருது வழங்கும் விழாவில் எல்லோரும் சென்று இருக்க அப்போது கண்ணம்மா லட்சுமியோடு வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இவ எதுக்கு இங்க வந்தார் என தன்னுடைய அம்மாவிடம் கேட்க நான்தான் வர சொன்னேன். உனக்கு புடிச்ச லட்சுமி இங்கே இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன் அவ மட்டும் தனியா வர மாட்டாங்க அதனால தான் அவங்க அம்மாவை கூட்டிட்டு வரச் சொன்னேன் என சொல்கிறார்.
பிறகு பாரதிக்கு விருது கொடுத்து பாராட்டுகின்றனர். நான் இந்த நிலைமைக்கு வரக் காரணம் என்னுடைய அப்பா அம்மா தான் என கூறுகிறார். அவர்கள் மட்டுமல்லாமல் இன்னொருவரும் இருக்கிறார் அது செம என சொல்லி என்னுடைய பொண்ணுக்கு இந்த விருதை கொடுக்க ஆசைப்படுகிறேன் என ஹேமாவை மேடைக்கு அழைக்க ஹேமா லட்சுமி வந்தால் தான் வருவேன் என சொல்லி விடுகிறார்.
இதனால் பாரதி அதிர்ச்சி அடைந்து வேறு வழியில்லாமல் லட்சுமியையும் மேடைக்கு அழைத்து இருவரது கையிலும் விருது கொடுத்து சால்வை அணிவித்து சந்தோஷப்படுகிறார். இதைப்பார்த்த கண்ணம்மா மகிழ்ச்சி அடைகிறாள். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Parimala and Co Title Teaser | Jayaram | Urvasi | Pandiraaj | Foxn
Sattendru Maarudhu Vaanilai Trailer | Jai | Yogi Babu | Babu Vijay | Meenakshi G…
Amma Amma Dhaan Lyric Video | Nooru Sami | Vijay Antony | Sreekanth Hariharan |…
GLADIATORS FILM MOTION POSTER | AJITH KUMAR | DIRECTOR VIJAY | GV PRAKASH KUMAR
I Nobody Official Teaser | Prithviraj Sukumaran | Parvathy Thiruvothu | Nisam Basheer | Jakes…
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…