தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்னும் இரண்டு வாரத்தில் வெற்றியாளர் யார் என்பது உறுதியாக தெரிந்து விடும். இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அமுதவாணன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நேரடியாக பைனலுக்கு சென்ற காரணத்தினால் அடுத்ததாக குறைந்த ஓட்டுக்களை பெற்றிருந்த ரட்சிதா வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரக்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவை பதிவு செய்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். நீங்கள் இல்லாமல் இந்த பயணம் சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வர பலரும் பிக் பாஸ் குறித்த கேள்விகளை கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
View this post on Instagram

