கன்னியாகுமரி சுற்றுலா தளத்தை திறக்க முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பிடி செல்வகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
கன்னியாகுமரி சாலையோர வியாபாரிகள் வியாபாரத்திற்காக வாங்கிய கடன் தொகைக்கு வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். தற்போது சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வர ஆரம்பித்த நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வந்து திரும்பிய வண்ணம் உள்ளார்கள் .
ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களில் அனுமதி அளித்தது போன்று கன்னியாகுமரியிலும் படகு போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகளும் கடை வைத்திருப்பவர்களும் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகி கஷ்டப்பட்ட வண்ணம் உள்ளார்கள். பலர் வாடகை மற்றும் மின் கட்டணம் கொடுக்க முடியாமலும் சம்பளம் கொடுக்க முடியாமலும் தலை மறைவாகி இருக்கின்றனர்.
இந்தியாவில் தென் கோடியான கன்னியாகுமரி சிறந்த சுற்றுலா தலமென்பதால் அதன் மூலம் வரும் வருமானத்தையும் அரசு இழந்து வருகிறது. ஆகவே துயரத்தின் உச்ச்சத்தில் இருக்கும் நடைபாதை வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் சுற்றுலா பயணிகளும் சந்தோசப்படும் விதமாக விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.
அவ்வாறு தொடங்காத பட்சத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நடைபாதை வியாபாரிகளுடன் ஒன்றிணைந்து கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார் அவர்கள் கஷ்டப்பட்ட நடைபாதை வியாபாரிகள் 100 பேருக்கு அரிசி மூடை வழங்கினார்.
இதில் குமரி கலப்பை மக்கள் இயக்க செயலாளர் திரு. ஜான் கிறிஸ்டோபர் ஜான் கிறிஸ்டோபர் கலப்பை சட்ட ஆலோசகர் டி பாலகிருஷ்ணன் கலப்பை சட்ட ஆலோசகர் டி. பாலகிருஷ்ணன் இணையதள ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராஜா கன்னியாகுமாரி நடைபாதை வியாபாரி சங்கத்தலைவர் திரு. பகவதியப்பன் திரு தங்கராஜ் , சேகர் நாகர்கோவில் பொறுப்பாளர் திரு சலீம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…