சூரரைப் போற்று பாடலில் ஜாதி ரீதியான வரிகள்.. நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு – வெளியான ஷாக் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க அபர்ணதி பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து மாறா தீம் மியூசிக், மண்ணுருண்ட, காட்டு பயலே, போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவற்றில் மண்ணுருண்ட பாடலில் ஜாதி ரீதியான வரிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்தப் பாடலால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் 2022 ஆம் ஆண்டு வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தப் புகாரை சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால் காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? படத்திற்கு சிக்கல் ஏற்படுமா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

admin

Recent Posts

Vaane Vaane Lyrical Video

Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…

2 hours ago

Kalangathey Lyrical Video

Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash

2 hours ago

She is My Chellakutty Lyric Video

She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…

2 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் ‘சின்ன மருமகள்’ ஸ்வேதா ஷாப்பிங் – குவிந்துள்ள கலக்கல் கலெக்‌ஷன்கள்!

விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…

2 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் ஷாப்பிங் – குறைந்த விலையில் குவிந்துள்ள அசத்தல் கலெக்‌ஷன்கள்!

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…

2 hours ago

சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் யுவா புஷ்பாகர்!

வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…

3 hours ago