படப்பிடிப்பு தொடங்கும் முன்பே லாபம்: ‘சூர்யா 47’ படக்குழுவினர் உற்சாகம்

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே லாபம்: ‘சூர்யா 47’ படக்குழுவினர் உற்சாகம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியலாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து,
மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் சூர்யா கலந்து கொள்கிறார். இதனிடையே ‘சூர்யா 47’ படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ், ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் மற்றும் இசை உரிமையினை திங்க் மியூசிக் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இதன் மூலமாகவே சுமார் ரூ.70 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் எந்தவொரு பணமும் முதலீடு செய்யாமலேயே அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டது.

இந்த பணத்தினை வைத்தே தயாரிப்பு செலவினை முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் ‘சூர்யா 47’ படத்தின் மூலம் நல்ல லாபம் ஈட்டிவிடுவார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், குறுகிய நாட்களில் ஒட்டுமொத்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதில் நஸ்ரியா, நஸ்லென் உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

 

Profits before shooting begins: ‘Suriya 47’ crew excited
dinesh kumar

Recent Posts

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

2 days ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

2 days ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

2 days ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

2 days ago

“பரோட்டா சூரி மாதிரி கோட்ட அழிக்க வைக்காதீங்க!” – நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…

2 days ago

“நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்!” – வெங்கட் பிரபுவின் X பதிவு வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…

3 days ago