Is this SK's new look in Venkat Prabhu's film? - Viral photo
வெங்கட் பிரபு படத்தில் SK-வின் நியூ கெட்டப் இதுதானா? – வைரலாகும் போட்டோ
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக வெங்கட்-எஸ்கே இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு அவருக்கு டீ-ஏஜிங் தோற்றத்தை வடிவமைக் கின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்திலும் விஜய்யின் டீ-ஏஜிங் லுக்கை அமெரிக்காவில் தான் வடிவமைத்தனர். அதே இடத்துக்கு, சிவகார்த்திகேயனின் தோற்றத்தை ஸ்கேன் செய்ய இப்போது சென்றுள்ளார். அதனால், இது சயின்ஸ் பிக்ஷன் மற்றும் டைம் ட்ராவல் கதையை கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது. வெங்கட் பிரபுவும் அதனை உறுதி செய்துள்ளார்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவகார்த்திகேயன் அமெரிக்க ஸ்டுடியோ ஒன்றில் நிற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர், ‘எதிர்காலம் இங்கே’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதையடுத்து டைம் டிராவல் கதை உறுதி. இப்படம் பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…