Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“அரசன்​” படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு !

Producer Thanu gives an update on the film "Arasan"!

“அரசன்​” படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு !

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ். தாணு படம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,

அரசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஹீரோ கேரவனே போறது இல்லை என இயக்குநர் பேசும்போது என்னிடம் கூறியிருந்தார். ஸ்பாட்டில் அனைவரிடமும் அமர்ந்து பேசி கொண்டு இருக்கிறாரார். திருஷ்டிபட்டு விடும் போன்று உள்ளது. மொத்த படக்குழுவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை யுனிவர்ஸில் நடக்கும் கதை தான் அரசன் படம்.

தொடர்ந்து இந்தப் படத்தில் தனுஷ் வருவாரா என்றால், அதற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. வடசென்னையில் அவர் ஜெயிலில் இருக்கும்போது, வெளியில் வேறொரு சம்பவம் நடக்கும். அப்படியான கதையாக அரசன் உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி படத்துக்குள் வந்து இருப்பதால் இன்னமும் மிரட்டலாக இருக்கும்’ என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள இந்த தகவல் தற்போது இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Producer Thanu gives an update on the film "Arasan"!
Producer Thanu gives an update on the film “Arasan”!