Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கு பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்.. எவ்வளவு பாருங்க

First Day Collection of Beast Movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட். உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அவர் மட்டும் இல்லாமல் அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, விடிவி கணேஷ், யோகி பாபு என எக்கச் சக்கமான பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடித்ததற்காக நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு எனத் தெரியவந்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகையான இவர் தமிழில் முகமூடி படத்தில் நடித்ததற்கு பிறகு பல வருடங்கள் கழித்து பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் இப்படத்திற்காக ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pooja Hegde Salary for Beast movie
Pooja Hegde Salary for Beast movie