Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் கிளிம்ஸ் வீடியோ வைரல்

pathu-thala-movie-first-single-song-glimpse-video

கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நம்ம சத்தம் என்னும் பாடலை பிப்ரவரி 3ஆம் தேதி காலை 12:06 மணிக்கு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்திருந்த சிம்புவின் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும் வகையில் இப்பாடலின் கிளிம்ஸ் வீடியோவையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.