Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ்

New updates on Vijay Deverakonda and Keerthy Suresh's upcoming film

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ்

விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார்.

ரவி கிரண் கோலா இயக்​கும் இப்படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்​கின்​றனர்​.கிறிஸ்டோ சேவியர் இசையமைத்​துள்​ளார். ஆனந்த் சி.சந்​திரன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

1980-களில் கிழக்கு கோதாவரியைக் களமாகக் கொண்ட இப்படம், அடுத்த ஆண்டு டிசம்​பர் மாதம் தெலுங்​கு, இந்​தி, தமிழ், கன்​னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்​கிறது.

இதன் டைட்​டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதில் கையில் அரிவாளு​டன் ரத்​தம் தெறித்த உடலுடன் வெளியாகி​யுள்ள விஜய் தேவரகொண்டா தோற்​றம் மிரட்​டலாக இருக்​கிறது.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் நடிப்பை தொடர்வதுபோல, ராஷ்மிகாவும் தொடர்வாரா என தேவரகொண்டாவிடம் நெட்டிசன்ஸ் கேட்டு வருகின்றனர்.

New updates on Vijay Deverakonda and Keerthy Suresh’s upcoming film