இந்த ஆண்டு முதல் வெளிவரும் புதிய திரைப்படங்களுக்கு இலவச டிக்கட்டுகள்

எமோஷனல் எண்டர்டெயின்மென்ட் நெட் வொர்க் நிறுவனம் ஒரு புதிய ஓ.டி.டி.தளத்தை துவக்கி உள்ளது. தியேட்டர் ஹுட் . காம் என அதற்கு பெயர் சூட்டியுள்ளது. ஜனவரி 15-ந் (2022) தேதி முதல் மக்களின் பார்வைக்கு படங்களை ஒளிபரப்ப உள்ளது.

இதன் விவரம் வருமாறு :-

அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டபொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் எண்டர்டெயின்மெண்ட்நெட்வொர்க் புதிய ஓ.டி.டி.ஸ்ட்ரியில் தளத்தை theatre hoods.com என்ற பிராண்ட் பெயரில் 2022 ஜனவரி 15 ஆம் தேதி இந்தியா மற்றும் உலக அளவில் வெளியிடுகிறது. இது சினிமா தியேட்டர் மற்றும் ஓ.டி.டி. அது பண்தை இணைத்து கொண்டுவருகிறது. அனைத்து இந்திய பிராந்தியமொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் திரைப்படங்கள், தொடர்கள், டி.வி.நிகழ்ச்சிகள்| இசை போன்ற உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் கண்டு மகிழலலாம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கான இலவச டிக்கட்டுகளையும், அவர்களின் ஓ.டி.டி.இயங்குதளத்தில் வரம்பற்ற உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தையும் வழங்குகிறார்கள்.

அவர்களின் இந்திய பிராந்திய சந்தைபடுத்துதல் பற்றி இதன் தலைவர் பிரசாத் வசிகரன் கூறுகையில், ” இந்திய சினிமா ஆர்வலர்களை நாங்கள் ஆழமாக புரிந்துகொண்டுள்ளோம். நமது சினிமாக்களை பற்றி நான் பெருமைப்படுகிறேன். அது நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அது நம் உணர்வுடன் கலந்திருக்கிறது.

எங்களது ஓ.டி.டி. இணையதளத்தில் பயனாளர்களுக்கு ஒவ்வொரு கணமும் சுவாரஸ்யமாக்குவதை எங்கள் முதன்மையான குறிக்கோளாக கொண்டுள்ளோம். நாங்கள் உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை வழங்குகிறோம். ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பிராந்திய மொழிகள் உள்ளடக்க நூலகத்தையும் , ஆயிரம் அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களையும் உருவாக்கி வருகிறோம். இப்பொழுது மிகக்குறைவான திரைப்படங்களே ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக திரையிடப்படுகின்றன. மேலும் பெரிய படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளில் வெளியாகிறது. சினிமா ரசிகர்கள் ஓ.டி.டி.யில் படங்களை பார்க்க 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்கிறார்கள். மேலும் சினிமா தியேட்டர் அனுபவங்கள் வித்தியாசமானவை. இந்த கிடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம்.

இந்தியாவில் திரையாங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கான, இலவச டிக்கட்டுகளையும், எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வரம்பற்ற உள்ளடக்கத்தை பார்க்கும் அனுபவத்தையும் இணைத்து வழங்குகிறோம். இது இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் மொபைல் ஆப்களில் உலகம் முழுவதும் கிடைக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், உள்ளடக்க படைப்பாளர்களை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மில்லியன்கணக்கான சினிமா ரசிகர்களை கவரும் வண்ணம் அவர்கள் எதிர்பார்க்கும் திரைப்படங்களின் விளம்பரங்களை அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். என்று கூறுகிறார்.

Suresh

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

16 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

16 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

16 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

16 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

16 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

16 hours ago