nelson-dilipkumar-next-movie-update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அனைவருக்கும் பரிச்சயமான இயக்குனராக மாறிய இவர் தற்போது ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது.
அதாவது இயக்குனர் நெல்சன் தனுஷை நேரில் சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாகவும் அந்த கதை தனுசுக்கு மிகவும் பிடித்து விட்டதால் அவர் உடனடியாக ஓகே சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என்றும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…