நடிகர் சூர்யாவின் 40-வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சரண் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் சரண் இதற்குமுன் வடசென்னை படத்தில் தனுஷுடனும், நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுக்கு தம்பியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


