Nayanthara plays the daughter of the Chief Minister
மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ்.
தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதமே தொடங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…