Categories: Health

தலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா?

இன்றைய காலக்கட்டத்தில் முடி உதிர்வு என்பது பலரிடையே காணப்படும் ஓர் பிரச்சினை ஆகும்.

இதற்காக சந்தைகளில் கண்ட மருந்துகள், எண்ணெய்கள் போன்றவை காணப்படுவதுண்டு.

விளம்பரங்களை பார்த்து சிலர் இதனை வாங்கி உபயோகிப்பதுண்டு.  இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது.

இதற்கு நாம் இயற்கையில் செய்யப்படும் இயற்கை எண்ணெய்களை வாங்குவதே சிறந்ததாகும்.

அந்தவகையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நேச்சுரல் ஹேர் ஆயிலை (Natural hair oil) எப்படி தயாரித்து தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் போதும்.  தலைமுடி பிரச்சனைகளைத் எளிதில் தடுக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கற்றாழை – 1 பெரிய இலை
  • கறிவேப்பிலை – சிறிது
  • சின்ன வெங்காயம் – 2 (நறுக்கியது)
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
செய்முறை

முதலில் கற்றாழை இலையின் முனைகளில் உள்ள கூர்மையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் மிக்ஸியில் கற்றாழைத் துண்டுகளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதனை வடிகட்டியில் ஊற்றி கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை நன்கு சூடேற்றிக் கொண்டு, அதில் வடிகட்டி வைத்துள்ள கற்றாழை சாற்றினை ஊற்றி நன்கு பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெங்காயம் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், எண்ணெய் தயார்.

குறிப்பு

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், தலை முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்றவை குறைந்து, முடி நன்கு வளர்வதைக் காணலாம்.

படித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க, அவர்களும் பயன் பெறட்டும்.

admin

Recent Posts

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட காவியா அறிவுமணி..!

இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…

1 week ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…

1 week ago

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

1 week ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்..!

கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…

1 week ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…

1 week ago

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…

1 week ago