Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நரேஷ் ஐயர் குறித்து பேசிய ஏ ஆர் ரகுமான்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

music director ar rahman talk about naresh iyar

நரேஷ் ஐயர் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான் அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்கார் விருதுகள் தேசிய திரைப்பட விருது பத்மபூஷன் என அனைத்து அவார்டுகளையும் அள்ளி உள்ளார் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் பாடகர் நரேஷ் குறித்த சுவாரசிய தகவல்களை ஏ ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார் அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு பாடல் போட்டிகளில் யாரெல்லாம் தோற்றுப் போகிறார்கள் என்று கவனிப்பேன் சில சமயங்களில் நன்றாக பாடுபவர்கள் கூட வெளியேறி விடுவார்கள் எனக்கு வெற்றியாளர்களை விட பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் நரேஷ் ஐயர் கூட 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார் அவரின் குரலில் இருந்த தரம் எனக்கு பிடித்திருந்தது நீ தோற்று விட்டாய் ஆனால் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லுகிறேன் என சொல்லி எனக்கு ட்ராக் பாட கிளம்பி வா என சொன்னேன் அவருக்கு முதல் பாடலிலேயே தேசிய விருது கிடைத்தது என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

music director ar rahman talk about naresh iyar
music director ar rahman talk about naresh iyar